உள்ளூர் செய்திகள்

உழைப்புக்கு பேதமில்லை!

வியட்னாம் நாட்டு மக்கள் கடும் உழைப்பாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே! அங்கு, பெண்களும், ஆண்களுக்கு நிகராக உழைக்கின்றனர். படத்தில் உள்ள இளம் பெண், உயரமான மலை பகுதிக்கு சென்று கீரை வகைகளை சேகரித்து, அடிவாரத்தில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருகிறாள். இவர் மலை ஏறும்போது, கூடவே ஒரு ஆடு மற்றும் நான்கு நாய்களை அழைத்து செல்கிறார். காட்டில் சேகரிக்கும் கீரைகளை ஆடு மற்றும் நாய்களின் முதுகில் கட்டி, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, சந்தையில் விற்கிறார். இவர் வளர்க்கும் ஆடும், நாய்களும், இவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு, கடுமையாக உழைத்து வருகின்றன. --ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !