உள்ளூர் செய்திகள்

இது புதுசா இருக்கே!

நம் அண்டை நாடான சீனாவின், பீஜிங் நகரில் ஏராளமான ஷாப்பிங் மால்கள் உள்ளன. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளன, இந்த மால்கள்.சில ஷாப்பிங் மால்களில் உள்ள கழிப்பறைகளில், சிறுநீர் கழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியப்படும் வகையிலான திட்டத்தை அறிவித்துள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் சிறுநீர் கழித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அதில் உள்ள டிஜிட்டல் திரைகளில், அது தொடர்பான பரிசோதனை முடிவுகள் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் சிறுநீரில் உள்ள, 'கால்சியம், பொட்டாசியம், குளுகோஸ்' அளவுகள் டிஜிட்டல் திரையில் ஒளிரும். இதற்காக பரிசோதனை கூடங்களில் உள்ளதைப் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள், இந்த கழிப்பறைகளில் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கோ, பரிசோதனைக் கூடங்களுக்கோ செல்லாமல், ஷாப்பிங் மாலின் கழிப்பறையிலேயே வாடிக்கையாளர்கள், சிறுநீர் பரிசோதனையை செய்து கொள்ளலாம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !