உள்ளூர் செய்திகள்

இது அதுவா! இல்லை இதுவா!

படத்தை பார்த்ததும், மரங்களை வெட்டி, அழகாக அடுக்கி, வைத்திருக்கின்றனர் என்று தானே நினைக்கிறீர்கள். நன்றாக உற்றுப் பாருங்கள்... இது ஒரு, 'ரெக்கார்டிங் ஸ்டுடியோ!' மரக்கட்டை வடிவில் இதை வடிவமைத்தவர், பியட் என்ற, 'டச்' கட்டட வல்லுனர். ஹேன்ஸ் லிபர்க் என்ற இசையமைப்பாளருக்காக, இப்படி ஒரு அறையை அழகாக வடிவமைத்துள்ளார். வெளியே மரங்களை கொண்டும், உள்ளே பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பிரேம்களை பயன்படுத்தியும், வித்தியாசமாக கட்டியுள்ளார். இதில் எல்லா வசதிகளும் கொண்ட அறைகளையும் உருவாக்கியுள்ளார் பியட் . காட்டில் உட்கார்ந்து யோசிச்சிருப்பாரோ! — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !