உள்ளூர் செய்திகள்

இதல்லவோ உண்மை காதல்!

தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண், திப்பாராத். இவருக்கும், பியட் என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன், திருமணம் நிச்சயமானது. இருவரும், சந்தோஷத்தில் காதல் பறவைகளாக வலம் வந்தனர். இந்நிலையில், திருமணம் நடப்பதற்கு சில நாட்களே உள்ள நிலையில், திடீரென, மாரடைப்பால் இறந்து விட்டார், பியட்.இந்த இழப்பை தாங்க முடியாத திப்பாராத், பியட்டின் இறுதிச் சடங்கின்போது, மணமகள் கோலத்தில், அங்கு வந்து, பியட்டின் கைவிரலில் மோதிரம் அணிவித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதைப் பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயினர் பியட்டின் உறவினர்கள். இந்த உருக்கமான காட்சியை கண்ட பலர், அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுதனர். 'இந்த காலத்தில், இப்படி ஒரு பெண்ணா...' என, அங்கு வந்திருந்தோர் ஆச்சர்யமடைந்தனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !