இந்த பெண்ணின் கைகளுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு!
தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் சாக்ட்ரம் என்ற மாகாணத்தில் வசிக்கும் பெண், டாங் தி டுயோய். இவரது கை, முதுகு, தோள் உள்ளிட்ட பாகங்களை சிறிது நேரம் தேய்த்து விட்டு முகர்ந்து பார்த்தால், மல்லிகை பூ மணம் வீசுகிறது.அதிலும், இரவு நேரத்தில் மணம் அதிகம் வீசுகிறது. வாசனை திரவிங்களை தெளித்தவர்கள் அருகில் சென்றால் எப்படி வாசம் வீசுமோ, அதுபோன்று உள்ளது.தினமும் ஏராளமானோர் வீட்டுக்கு வந்து, அவரது கைகளை தேய்த்து, ரம்மியமான வாசனையை நுகர்ந்து விட்டுச் செல்கின்றனர். எதனால் இந்த பெண்ணின் மீது இப்படி வாசனை வீசுகிறது என, அவருக்கும் தெரியவில்லை; அந்த ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியவில்லை.ஜோல்னாபையன்