உள்ளூர் செய்திகள்

திருநங்கை பொம்மை!

அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான டோனர், அவ்வப்போது, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.அதன்படி, திருநங்கை பொம்மையை தயாரித்துள்ளது. இதில், என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... உலகிலேயே, முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள திருநங்கை பொம்மை, இது தான்.இந்த பொம்மைக்கு மாடலாக இருந்தது, ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற, 16 வயது திருநங்கை. 'சிறு வயதில், பொம்மைகளை வைத்து விளையாடுவதில், மிகவும் ஆர்வமாக இருப்பேன். இப்போது, நானே ஒரு பொம்மைக்கு, அதுவும், சாதனை பொம்மைக்கு மாடலாக இருந்ததை நினைத்தால், மகிழ்ச்சியாக இருக்கிறது...' என்கிறார் ஜாஸ்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !