அம்மாடி... இது தான் கூந்தலா....?
சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, ஜார்ஜியா. இந்நாட்டைச் சேர்ந்தவர் ஆஷா மண்டேலா, 50 வயது பெண். இவர், உலகிலேயே, மிக நீளமான கூந்தலை உடைய பெண், என்ற சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில், இடம் பெற்றுள்ளார்.இவரது கூந்தலின் நீளம், 55 அடி, 7 அங்குலம். கடந்த, 25 ஆண்டுகளாக, இவர், தன் கூந்தலை,வெட்டவே இல்லையாம். குழந்தையை வளர்ப்பது போல், தன் கூந்தலை வளர்த்து, பாதுகாத்து வருகிறார்.'கூந்தலை, அளவுக்கு அதிகமாக வளர்த்தால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்தும், அதை, இவர், பொருட்படுத்துவது இல்லை. வெளியில் செல்லும்போது, கழுத்துக்கு குறுக்கே, ஒரு துணியை, தூளி போல் கட்டி, அதில், கூந்தலை, சுருட்டி வைத்துக் கொள்கிறார். 'சாகும்வரை, கூந்தலை வளர்ப்பேன்' என, சபதம் எடுத்துள்ளார், ஆஷா.— ஜோல்னா பையன்.