உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: நாட்டில் நடக்கும் அதிகப்படியான பாலியல் குற்றங்களுக்கு, போதைப் பொருட்கள் தானே காரணம்?ஆமாம். காவல்துறையினரும், அதிகாரிகளும் கையூட்டு வாங்குவதால், 'டாஸ்மாக்'கைத் தவிர, மற்ற போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க முடிவதில்லை.'பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எங்கே?' என, கோர்ட் கேட்டால், 'எலிகள் தின்று விட்டன...' என, போலீசார் கூறுவது தமாஷ்!ஆர்.சுனில் சிவராம், பெங்களூரு: காவல் துறையினரை, 'கவனித்து விடுவேன்' என்று கூறியுள்ளீரே... இது லஞ்சம் இல்லையா?இரவு - பகல் பாராமல், மழை - வெயிலுக்கு சளைக்காமல், விடுமுறையே இல்லாமல் வேலை செய்யும் காவல்துறை நண்பர்களுக்கான, என் அன்பு பரிசை, லஞ்சம் என கொச்சைப்படுத்தாதீர்கள், சுனில்! * எம்.மனோகரன், ராமநாதபுரம்:'ஒன் மேன் ஆர்மி'யாக செயல்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், தங்களுக்கு பிடித்தது, சினிமா துறையா, அரசியல் துறையா?இரண்டு துறைகளிலுமே அவரின் செயல்பாடு பிடிக்கும்!* ஏ.எஸ்.யோகானந்தம், கலிங்கியம், ஈரோடு: 'அமைச்சர் உதயநிதிக்கும், எனக்கும் உள்ள நட்பு, மூன்று தலைமுறைக்கும் தொடரும்...' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது, தன் வாரிசுக்கு அட்வான்சாக, 'சீட்' போடுவது போலத் தானே?சரியாகச் சொன்னீர்கள்... அது தான் உண்மை!அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி: நீங்கள் லாட்டரி சீட்டை, எப்போதாவது வாங்கியதுண்டா?குறுக்கு வழியில் சம்பாதிப்பது தவறு; லாட்டரிச் சீட்டே வாங்கியதில்லை!வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு: மிகப்பெரிய சொத்தாக உங்களிடம், 'கேரியர்' வைத்த, 'அட்லஸ் சைக்கிள்' இருப்பதாக, ஒருமுறை சொன்னீர்கள். இன்னமும் அதை பராமரிக்கிறீர்களா?எனக்கு, 'பி.எம்.டபிள்யு., ஜாகுவார், மசராட்டி' என, மூன்று கார்கள் வாங்கிக் கொடுத்துள்ளார், ஆசிரியர்; அவற்றை ஓட்டுவது சந்தோஷமாக இருக்கிறது.இப்போது டீ வாங்கிக் கொடுக்க, இன்னொரு, 'ஆபீஸ் அசிஸ்டென்ட்' நியமிக்கப்பட்டு விட்டார்!ஏதாவது ஒரு காருடன் எடுத்த படம் வெளியிட வேண்டுமா? ஜெ.ரவிக்குமார், காங்கேயம்: திரையில் மட்டும் தான், பாலியல் தொல்லையா?எல்லா துறையிலும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கதான் செய்கிறது. பெண்ணை மீறி எதுவும் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்!வி.கவுதம சித்தார்த், விழுப்புரம்: வரதட்சணை கொடுமைகள், நம் நாட்டில் மட்டும் தானா; வெளிநாடுகளிலும் இருக்கிறதா?எல்லா நாடுகளிலும் உண்டு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !