அழகு குறிப்பு: முகத்தில் கரும்புள்ளிகள் மறைய...
* முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில், ஒரு மேஜைக்கரண்டி பட்டை பொடியுடன், தேனை கலந்து கூழாக்கி, இரவில் பூசி, காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து முகம் அழகாகும் * சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்க, கிரீன் டீ இலை ப யன்படுகிறது. கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் வைத்து, மென்மையாக, 'ஸ்கரப்' செய்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும், இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும் * ஓட்ஸ் பொடி ஒரு மேஜைக் கரண்டி, சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூழாக்கி, முகத்தில் பூசி, சிறிது நேரம், 'ஸ்கரப்' செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.