சைக்கிள் மனிதர்!
படத்தில் உள்ள பாஸ்கரன் சேட்டனுக்கு, 78 வயதாகிறது. இந்த வயதிலும், இளைஞரை போல சைக்கிளில் ஊர் சுற்றுகிறார். இவருடைய இந்த பழங்கால சைக்கிளில் பல பெட்டிகள் பொருத்தி, அதனுள் அந்தக்கால ரேடியோ உட்பட பல பொருட்களை போட்டு வைத்துள்ளார். இவரை பார்த்து கிண்டல் செய்தாலும், அதை பற்றி இவர் கவலைப்படுவது இல்லை. ரேடியோவில் பாடல்கள் மற்றும் செய்திகளை கேட்டபடி பயணம் செய்வார். இதுவரை, 29 முறை இந்த சைக்கிளில் சபரிமலை சென்று, அய்யப்பனை தரிசித்ததாக கூறி பெருமைப்படுகிறார், பாஸ்கரன் சேட்டன். கேரள மாநிலம் கொல்லம், கொட்டாரக்கரா பகுதியில் தான் இந்த சைக்கிள் மனிதர் வாழ்ந்து வருகிறார். - ஜோல்னாபையன்