உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும், தமிழ் இயக்குனர்கள்!தமிழில் தான் இயக்கிய, கஜினி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட சில படங்களை ஹிந்தியில், 'ரீ-மேக்' செய்த, ஏ.ஆர். முருகதாஸ், தற்போது, சல்மான் கான் நடிப்பில், சிக்கந்தர் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து, கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில், அமீர்கானை வைத்து இயக்க உள்ளார்.அதே போல், ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தை இயக்கிய, அட்லி அடுத்தபடியாக, சல்மான்கான் நடிப்பில், ஒரு ஹிந்தி படத்தை இயக்குகிறார்.இவர்களைத் தொடர்ந்து தற்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வரும், லோகேஷ் கனகராஜும், அடுத்து ஹிந்தியில், அமீர்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.சினிமா பொன்னையாஇரண்டு கைகளிலும், டாட்டு வரைந்த அஜித்குமார்!விடாமுயற்சி படத்தை அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், குட் பேட் அக்லி என்ற படத்தில், மூன்று வேடங்களில் நடித்து வருகிறார், அஜித் குமார். இதில் ஒரு வேடத்தில், 10 கிலோ எடையை குறைத்து, 'ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்' வைத்து நடிக்கும் அஜித், தன் இரண்டு கைகளிலும், 'டாட்டூ' வரைந்து இருக்கிறார். 'டாட்டூ'வுக்கும் கதைக்கும் சம்பந்தம் இருப்பதால், படம் முழுக்க இந்த, 'கெட்-அப்'பில் நடிக்கிறார், அஜித்குமார்.— சி.பொ.,சீரியல் நடிகருக்கு ஜோடியாகும், தமன்னா!தமிழில், அரண்மனை - 4 படத்துக்கு பிறகு, பட வாய்ப்பு இல்லாத தமன்னா, தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது, 'கண்ணான கண்ணே, மருமகள்' போன்ற, 'டிவி' தொடர்களில் நாயகனாக நடித்த, ராகுல் ரவி என்பவர் அடுத்து, 'ஹீரோ' ஆக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடி ஆகிறார், தமன்னா. தொடர்ந்து புதுவரவு நடிகர்களுடன், தன் அடுத்த ரவுண்டை துவங்க போவதாகவும் அறிவித்திருக்கிறார்.— எலீசாஜெயம்ரவியின் நீட் நாள் ஆசை!தற்போது, தமிழில் நடித்தபடியே ஹிந்தியில் நடிப்பதற்கும் தயாராகி வருகிறார், ஜெயம் ரவி. இந்த நிலையில், வெற்றி மாறன் இயக்கத்திலும் விரைவில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். 'பேராண்மை படத்தில் நடித்து முடித்த சமயம், வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருந்தேன். ஆனால், அது அப்போது கைகூடவில்லை. இந்நிலையில், அவருடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில், வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். இதன் மூலம் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற, என் நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது...' என்கிறார், ஜெயம் ரவி.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!சார்பட்டா நடிகையை வைத்து, சுள்ளான் இயக்கிய படம் மட்டுமின்றி, உச்ச நடிகர் நடித்த படத்திலும், பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளில் நடிக்க வைத்தனர். தற்போது அதுபோன்ற கேரக்டர்களுடன் மேலும் சில இயக்குனர்களும் அவரிடத்தில் கதை சொல்லி வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை, 'இரண்டு படத்தில் கற்பழிப்பு சீனில் நடித்ததால், தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும் தான் நான் செட்டாவேன் என்று முடிவு செய்து விடாதீர்கள்...' என்று அந்த படங்களை திருப்பி அனுப்பியுள்ளார். 'விட்டால் என்னை முழுநேர பாலியல் காட்சி நடிகை என்ற முத்திரையை குத்தி விடுவர். இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளில் நடிப்பதில்லை என, முடிவெடுத்துள்ளேன்...' என, கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார், சார்பட்டா நடிகை. சினி துளிகள்!* ராயன் மற்றும் வேட்டையன் படங்களில் நடித்தார், துஷாரா விஜயன். அடுத்து தெலுங்கில் நடிப்பதற்கு கல் எரிந்து வருகிறார்.* பட வாய்ப்பு இல்லாத, ஓவியா, 'வெப் சீரியல்'களில் கவனத்தை திருப்பி உள்ளார்.* சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ்.எம், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான, 'ஸ்கிரிப்ட்' எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !