உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அரசியல் விழிப்புணர்வு பாடம் நடத்தும், விஜய்!ஜனநாயகன் படத்தில் அரசியல் கலந்த கதையில் நடித்திருக்கும் விஜய், பொது மக்களுக்கு பல இடங்களில், அறிவுரைகளும் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஓட்டு போடுவதற்கு முன், கட்சி மற்றும் தங்களது வேட்பாளர் போன்றவர்களை கருத்தில் கொண்டு ஓட்டளிக்க வேண்டும். இவர்களால், இந்த நாட்டுக்கும், நம்முடைய வீட்டுக்கும் நல்லது நடக்குமா என்று யோசிக்க வேண்டும்.கண்மூடித்தனமாக ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என, கடமைக்காக செய்வதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு பாடம் நடத்தும் வகையில், சில காட்சிகளில் நடித்திருக்கிறார், விஜய்.— சினிமா பொன்னையாஅழுத்தமான வேடம் தேடும், ருக்மிணி வசந்த்!தற்போது, தமிழில் வளர்ந்து கொண்டிருக்கும் கன்னட நடிகை, ருக்மிணி வசந்த், தன்னை தேடி வழக்கமான கதாநாயகி வேடங்கள் வந்தால், அவற்றை தவிர்த்து விடுகிறார். 'என்னை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.'தமிழில், கதாநாயகிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பர் என்பதால் தான், கோலிவுட்டுக்கே வந்தேன். அதனால், மரத்தைச் சுற்றி, 'டூயட்' பாடும் சராசரி வேடங்களை கொடுத்து, என்னை பின்னுக்கு தள்ளி விடாதீர்கள். 'வெயிட்'டான வேடங்களை மட்டுமே கொடுங்கள்...' என, இயக்குனர்களை வலியுறுத்தி வருகிறார், ருக்மிணி வசந்த்.— எலீசாவிமர்சனங்களை ஊதி தள்ளிய, ஐஸ்வர்யா லட்சுமி!தனுஷ் நடித்த, ஜகமே தந்திரம் என்ற படத்தில்,அறிமுகமான மலையாள நடிகை, ஐஸ்வர்யா லட்சுமி, அதன் பிறகு மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த, மாமன் படத்தில், சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படி, காமெடி நடிகருக்கு ஜோடியாக அவர் நடித்ததை பலரும் விமர்சனம் செய்தனர். இதையடுத்து, 'என்னை பொறுத்தவரை பெரிய நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம், நான் தரம் பிரித்து பார்ப்பதில்லை. என்னுடைய கேரக்டருக்கு கதையில் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற கோணத்தில் தான், படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.'மேலும், சூரி காமெடியனாக இருந்தாலும், 'ஹீரோ'வாக தன்னை நிலை நிறுத்தி கொண்டார். அவருடன் நடித்ததால் என்னுடைய, 'இமேஜ்' குறைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை...' என, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி.எலீசா சர்ச்சை நாயகனாகும், சந்தானம்சந்தானம் நடித்து வெளியான, வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில், ஈ.வெ.ரா.,வை, 'அட்டாக்' பண்ணும் காட்சி இடம் பெற்றதால், அது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி, அந்த படத்துக்கு, 'பப்ளிசிட்டி'யாக அமைந்தது.இந்நிலையில் சமீபத்தில், சந்தானம் நடித்து வெளியான, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திலும், 'சீனிவாசா கோவிந்தா...' என்ற பக்தி பாடலை இணைத்து, சர்ச்சை ஏற்படுத்தினர். அதையடுத்து எதிர்ப்பு வலுத்ததால் அந்த பாடலை படத்திலிருந்து நீக்கி விட்டனர். அதுவே இந்த படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்தது.அதன் காரணமாக, தான் நடிக்கும் புதிய படங்களிலும் ஏதேனும் சர்ச்சைகளை கொளுத்திப் போட்டு, படத்திற்கு பரபரப்பை ஏற்படுத்துமாறு, இயக்குனர்களை கேட்டுக் கொண்டு வருகிறார், சந்தானம்.— சினிமா பொன்னையாகருப்பு பூனை...உலக நடிகருடன் நடித்திருக்கும் படத்தில், தன் திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரத்தை கொடுத்தாலும், வாங்கிய வேலைக்கு ஏற்ற படக்கூலியை கொடுக்கவில்லை என, புலம்பி கொண்டிருக்கிறார், மூனுஷா நடிகை.மேற்படி உலக நடிகரே இந்த படத்தை தயாரித்ததால், பாதியாக படக்கூலியை குறைத்து, தன் தலையில் மிளகாய் அரைத்து விட்டதாக கூறும், நடிகை, 'இனிவரும் காலங்களில் நட்பு வட்டார நடிகர்கள் தயாரிக்கும் படங்களில் எக்காரணம் கொண்டும் நடிக்க மாட்டேன்...' என்கிறார்.சினி துளிகள்!* மலையாளத்தில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வரும், ராம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார், த்ரிஷா.* பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான, நடிகர் ஹம்சவர்தனின் முதல் மனைவி ரேஷ்மா, கடந்த 2021ல், 'கொரோனா' தொற்றால் உயிரிழந்தார். தற்போது, நடிகை நிமிஷாவை, இரண்டாவதாக, திருமணம் செய்து கொண்டுள்ளார், ஹம்சவர்தன்.நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், தமிழில், மணிரத்னநம் இயக்கிய, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார், தெலுங்கு நடிகை, சோபிதா துலிபாலா. தற்போது, பா. ரஞ்சித் இயக்கும், வேட்டுவம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !