உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

10 ஆண்டுகளுக்கு பிறகு கனவு படத்தை இயக்கும், எஸ்.ஜே.சூர்யா!அஜித் நடித்த, வாலி படத்தின் இயக்குனரான, எஸ்.ஜே.சூர்யா, அதன் பின், விஜய் நடிப்பில், குஷி படத்தை இயக்கினார். பின்னர் தானும், 'ஹீரோ' ஆகிவிட்டவர், சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார்.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, கில்லர் என்ற, 'திரில்லர்' படத்தை இயக்கப் போகிறார், எஸ்.ஜே.சூர்யா. இது, தன் கனவு படம் எனக் கூறும் அவர், கில்லர் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என, ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.சினிமா பொன்னையாகிளாமர் ரூட்டுக்கு மாறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்!மாதவனுக்கு ஜோடியாக, விக்ரம் வேதா படத்தில் நடித்த, ஷ்ரத்தாஸ்ரீநாத், அதன் பின், கே-13, நேர்கொண்ட பார்வை, மாறா என, பல படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில், நடித்தார். ஆனால், அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தற்போது, 'பிகினி' நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.'சினிமா உலகில் என் திறமைக்கு சரியான வாய்ப்பு கொடுக்க யாரும் தயாராக இல்லை. அதன் காரணமாகவே, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக, கவர்ச்சி வழிக்கு மாறி இருக்கிறேன்...' என, தன் நிலைப்பாட்டை கூறுகிறார், ஷ்ரத்தா ஸ்ரீநாத்.எலீசாத்ரிஷாவுக்கு, ஷாக் கொடுத்த அக்காள், இமேஜ்!தக்லைப் படத்தில், கமலஹாசனுடன் நடித்த, த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவி உடன், விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படி, 'சீனியர் ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்து வரும், த்ரிஷா, அடுத்து, 40 வயது, 'ஹீரோ'களுடன் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க, கல் எறிந்து வருகிறார்.ஆனால், இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க தயாராக இருந்தபோதும், 'ஹீரோ'கள் அவரை தவிர்க்கின்றனர்.'த்ரிஷாவுடன், 'ரொமான்டிக் சீன்'களில் நடித்தால், காதலியுடன் நடிக்கும், 'பீல்' இருக்காது. அவரை பார்த்தாலே, அக்காள், 'பீல்' தான் வருகிறது. அதனால், வேறு இளவட்ட நடிகையரை ஒப்பந்தம் செய்யுங்கள்...' எனச் சொல்லி, த்ரிஷாவுக்கு, 'ஷாக்' கொடுக்கின்றனர். — எலீசாரஜினி படத்தின் டைட்டில் மீ்ண்டும் மாற்றம்!லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, கூலி படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் கூலி என்ற, 'டைட்டிலில்' வெளியாகும் நிலையில், ஹிந்தியில் ஏற்கனவே, அமிதாப்பச்சன், கூலி என்ற பெயரில், ஒரு படத்தில் நடித்திருப்பதால், இப்படத்தின், 'டைட்டிலை' மஜ்துார் என, வைத்திருந்தனர்.ஆனால், ரஜினி படத்திற்கு இந்த, 'டைட்டில்' பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுந்ததை அடுத்து, தற்போது, கூலி தி பவர்ஹவுஸ் என, ஹிந்தி பதிப்பின், 'டைட்டிலை' மாற்றியுள்ளனர்.சி.பொ.,தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர், எச்.வினோத்!தற்போது, தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் போன்ற பலரும், தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கி, மற்ற இயக்குனர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.அதுபோன்று, விஜயின், ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள, எச்.வினோத்தும் தற்போது பட நிறுவனம் துவங்கியுள்ளார். இதே போன்று நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோரும் தங்களது நிறுவனத்தில் மற்ற, 'ஹீரோ'கள், இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!சுள்ளான் நடிகர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்ததால், 30 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்தை உயர்த்த முடியாமல், தடுமாறி வந்தார். தற்போது அவர் நடித்துள்ள, மூன்று எழுத்து படம் வெற்றி பெற்றுள்ளதால், ஒரே படத்தில் சம்பளத்தை, 50 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்.ஆனால், இந்த சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய, பாலிவுட்டில் சிலர் தயாராக உள்ளனர். இருப்பினும், கோலிவுட் தயாரிப்பாளர்களோ, 'இவர் நம்முடைய பட்ஜெட்டுக்குள் அடங்க மாட்டார்...' எனச் சொல்லி, சுள்ளான் நடிகரை வைத்து படம் தயாரிக்க இருந்தவர்கள், வேறு நடிகர்களை நோக்கி, 'யுடர்ன்' போட்டு வருகின்றனர்.******தற்போது தான் நடித்து வரும், ஐந்து எழுத்து படத்தில் ஜெயமான அந்த நடிகர் வில்லனாக நடிப்பதால், 'என்னைவிட சீனியர் என்பதற்காக அவருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது...' என, இயக்குனரிடம் நிபந்தனை போட்டுள்ளார், அமரன் நடிகர்.மேலும், 'நான் மூன்று காட்சிகளில் வந்தால், அவர் ஒரு காட்சியில் தான் வர வேண்டும். என்னை மட்டுமே படம் முழுக்க, 'ஹைலைட்' பண்ண வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார், அமரன் நடிகர்.சினி துளிகள்!ஹிந்தியில், ராஞ்ஜனா, அட்ராங்கிரே போன்ற படங்களைத் தொடர்ந்து மீண்டும், ஆனந்த் எல்.ராய் இயக்கும், தேரே இஸ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார், தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, கீர்த்தி சனோன் நடிக்கிறார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வந்த, மதராஸி படத்தை முழுமையாக முடித்துவிட்ட, சிவகார்த்திகேயன், தற்போது சுதா இயக்கும், பராசக்தி படத்தில் முழு வீச்சில் நடித்து வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !