உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சிவகார்த்திகேயனின் புதிய பயிற்சியாளர்!அமரன் மற்றும் மதராஸி படங்களுக்கு பிறகு, 'ஆக்ஷன் ஹீரோ'வாக உருவெடுத்திருக்கும், சிவகார்த்திகேயன், சண்டை காட்சிகளில் இன்னும் தன்னை மெருகேற்றிக் கொள்ள, புதிய சண்டை பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளார். குறிப்பாக, 'என் சண்டையிடும் பாணி, மற்ற நடிகர்களை விட வித்தியாசமானதாகவும், இளைஞர்களை வெறியேற்ற கூடியதாகவும் இருக்க வேண்டும்...' என்று சொல்லி தீவிர பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.அதோடு, 'விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் சரத்குமார் படங்களை போன்று, என் படங்களிலும் சண்டை காட்சிகள் அதிரடியாக இருக்க வேண்டும்...' என, அடுத்து தன்னை இயக்கும் இயக்குனர்களிடம் கூறி வருகிறார், சிவகார்த்திகேயன்.சினிமா பொன்னையா கிளாமருக்காக, 'வெயிட்' போடும், பிரியங்கா மோகன்!டாக்டர், டான் மற்றும் கேப்டன் மில்லர் என, பல படங்களில் நடித்த, பிரியங்கா மோகனை, கிளாமராக நடிக்க இயக்குனர்கள் கேட்டனர். ஆனால், அவரோ, 'நான் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி. அதனால், அப்படி நடித்தால் எடுபடாது...' என்று, 'செக் போஸ்ட்' வைத்து நடித்து வந்தார்.இதனால், முன்னணி, 'ஹீரோ'கள் ஓரங்கட்டி வருவதால் அதிர்ச்சியடைந்துள்ள, பிரியங்கா மோகன், மார்க்கெட்டை காப்பாற்றிக்கொள்ள அடுத்தபடியாக ஓரளவு, 'வெயிட்' போட்டு வருவதோடு, 'விரைவில் நானும் கவர்ச்சி கோதாவில் குதிக்கப் போகிறேன்...' என்று, 'கமர்ஷியல்' பட இயக்குனர்களுக்கு, 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார்.எலீசா10 கோடி ரூபாயை சொல்லி அடிக்கும், சம்யுக்தா!வா த்தி படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை, சம்யுக்தா, தற்போது, விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் நடிப்பதோடு, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை, மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த, சம்யுக்தா, தற்போது, தான் பல மொழி நடிகை ஆகிவிட்டதால் தன் படக்கூலியை, 10 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். அதோடு, பாலிவுட் நடிகையருக்கு இணையாக கிளாமரில் கலக்கவும், தான் தயாராக இருப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார், அம்மணி. — எலீசாபிரபல, 'ஹீரோ'களை, 'அட்டாக்' செய்த, அரவிந்த்சாமி!நடிகர் அரவிந்த்சாமி தனக்கென்று ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளாதவர். அதோடு, மற்ற நடிகர்கள் ரசிகர் மன்றம் வைப்பதையும் நேரடியாகவே எதிர்ப்பவர். அது குறித்து அவர் கூறும்போது, 'எந்த ஒரு நடிகரின் மகன்களும், ரசிகர் மன்றத்தில் இருப்பதில்லை. ஆனால், அப்பாவி இளைஞர்கள் தான் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, தங்களது வாழ்க்கையை வீண் அடிக்கின்றனர். தாங்கள் பெரிய, 'ஹீரோ'வாக வேண்டும்; தங்களுக்கு, 'கட்-அவுட்' மற்றும் 'பேனர்' வைக்க வேண்டும் என்பதற்காக, அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை கெடுப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை...' என்று சில நடிகர்களை நேரடியாகவே, தாக்கி பேசி வருகிறார், அரவிந்த்சாமி.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!உச்ச நடிகருடன் சில படங்களில் நடித்த புயல் காமெடியன், மீண்டும் அவரது புதிய படங்களிலும், 'என்ட்ரி' கொடுக்க கல்லெறிந்தார். ஆனால், உச்ச நடிகரோ, 'தற்போது இளவட்டங்களுடன் புதிய கூட்டணி அமைத்து என்னையும் புதுப்பித்துக் கொண்டு வருகிறேன். அதனால், மீண்டும் பழைய கலைஞர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. அதோடு, இனிமேல் நம்முடைய கூட்டணியும் பெரிதாக, 'ஒர்க்-அவுட்' ஆகாது...' என்று, புயல் காமெடியனுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.இதையடுத்து தன்னை சந்திக்கும் சினிமா புள்ளிகளிடம், 'அவர் படத்தின் வெற்றிக்கு என்னுடைய காமெடி எவ்வளவு பக்கபலமாக இருந்தது. அதையெல்லாம் மறந்து விட்டு, 'நீ பழைய நடிகன்'னு ஒரு வார்த்தை சொல்லி இப்படி என்னை கழட்டி விட்டுட்டாரே...' என்று புலம்பி வருகிறார், புயல் காமெடியன். சினி துளிகள்!* நெல்சன் இயக்கத்தில் நடித்த, ஜெயிலர் படத்தின் வெற்றி காரணமாக தற்போது, ஜெயிலர்- 2 படத்தில் நடித்து வரும், ரஜினி, இந்த படமும், 'ஹிட்' அடித்தால், ஜெயிலர்-3 படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.* 'காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வேன். இதுதான் என்னுடைய, 'பிட்னஸ்' ரகசியம்...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.* சிம்புவுக்கு ஜோடியாக, வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்த, நடிகை, சித்தி இத்னானி, தற்போது, ரெட்ட தல படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !