இதப்படிங்க முதல்ல...
விட்டதை பிடிப்பாரா, ரஜினிகாந்த்?ரஜினி நடித்த, கூலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே அந்த படத்தை, 1000 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால், 500 கோடி ரூபாய் வசூலிப்பதற்குள் அந்த படம் படாத பாடுபட்டது. அதனால், 'இனிமேல் திரைக்கு வருவதற்கு முன்பே படங்களின் வசூல் குறித்து, 'டார்கெட்' வைக்கக் கூடாது...' என்று சொல்லி விட்டார், ரஜினி. தற்போது, ஜெயிலர்- 2 படம் அவருக்கு திருப்திகரமாக வந்திருப்பதால், 'கூலி படத்தில் விட்ட, ஆயிரம் கோடி ரூபாயை, ஜெயிலர்- 2 படத்தில் கைப்பற்றி சாதனை நிகழ்த்தி விட வேண்டும்...' என்று அப்பட இயக்குனரான, நெல்சனிடம் கூறியுள்ளார்.— சினிமா பொன்னையாகுத்துப்பாட்டு வேட்டையில் இறங்கிய, தமன்னா!ரஜினியின், ஜெயிலர் படத்தில், 'ஹவாலா...' என்ற பாடலுக்கு, தமன்னா ஆடிய குத்தாட்டம் பெரிய அளவில் பிரபலமானது. அதேபோல், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் நடனமாடிய பாடல்களும், 'சோஷியல் மீடியா'வில், 'ட்ரண்டிங்' ஆனது. அதனால் இப்போது, 'மெகா ஹீரோ'களுடன் குத்து பாட்டுக்கு நடனமாடியாவது மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணிக்கொள்வோம் என்று குத்துப்பாட்டு வேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார், தமன்னா. — எலீசாருக்மணி வசந்துக்கு சுபாரிசு செய்யும், சிவகார்த்திகேயன்!'ம தராஸி படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த, ருக்மணி வசந்த் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் இயக்குனர் சொன்னதுமே, கற்பூரம் மாதிரி பிடித்துக் கொள்வார். அவருடன் நடித்த அனுபவம் ரொம்ப இனிமையானது. இதுவரை எனக்கு ஜோடியாக நடித்த நடிகையரில் மீண்டும் நான் நடிக்க ஆசைப்படும் ஒரு நடிகை என்றால், அது, ருக்மணி வசந்த் தான். அந்த அளவுக்கு, அவர் ஒரு சிறந்த நடிகை...' என்கிறார், சிவகார்த்திகேயன். மேலும், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும், அவரை பற்றி பெருமையாக பேசி வருகிறார்.— சி.பொ.,இயக்குனரை திருப்பி அனுப்பிய, சந்தானம்!ஜீவா நடிப்பில், ராஜேஷ் இயக்கிய, சிவா மனசுல சக்தி படத்தில், சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், மீண்டும், ஜீவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும், ராஜேஷ் அந்த படத்தில் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க, சந்தானத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரோ, 'கெஸ்ட் ரோல் என்று சொல்லி மீண்டும் தன்னை காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க திட்டம் போடுகிறார்...' என்று உஷாராகி விட்டார். எனவே, 'கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு நான் ஒன்றும், 'பெஸ்ட்' நடிகன் இல்லை. அதற்கு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார், சந்தானம்.— சினிமா பொன்னையாகருப்பு பூனை...தாரா நடிகையின் கணவரான அந்த இயக்குனர், தன் மனைவி நடிக்கக் கூடிய படங்களுக்கான கதைகளை தானும் அவருடன் அமர்ந்து, இயக்குனர்களிடம் கேட்கிறார். ஆனால், அப்படி கேட்பவர் சில இயக்குனர்கள் சொல்லும் கதைகளின் முக்கிய, 'சீன்'கள் தன்னை, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டால், அந்த, 'சீன்'களை தான் இயக்கும் படங்களில், 'உல்டா' பண்ணி வைத்து விடுகிறார். இப்படி தற்போது தான் இயக்கி உள்ள புதிய படத்தில் சில முக்கிய காட்சிகளை அவர் இணைத்திருப்பது கோலிட்டில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தாரா நடிகையிடம் கதை சொல்லவே பயப்படுகின்றனர், இயக்குனர்கள்.சினி துளிகள்!* மூக்குத்தி அம்மன் 2 படத்தை அடுத்து, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார், நயன்தாரா* விடுதலை படத்தைப் போலவே, சிம்புவை வைத்து தான் இயக்கும் புதிய படத்தையும், இரண்டு பாகங்களாக இயக்குகிறார், வெற்றிமாறன்.அவ்ளோதான்!