இதப்படிங்க முதல்ல...
'சென்டிமென்ட்' பார்க்கும், மணிரத்னம்!த க்லைப் படத்தின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு, தன் அடுத்த பட வேலைகளை துவங்கியுள்ளார் இயக்குனர், மணிரத்னம். இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரையும் நடிக்க வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், தக்லைப் படத்தின் தோல்வி காரணமாக அப்படத்தில் நடித்த அவர்கள் இருவரையுமே துாக்கி விட்டு, விஜய்சேதுபதி மற்றும் -ருக்மிணி வசந்த்தை புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். அதோடு, இன்னும் சில வெற்றி படங்களில் நடித்த, நடிகர், நடிகையரையும் இந்த படத்திற்கு, ஒப்பந்தம் செய்து வருகிறார்.--சினிமா பொன்னையாடீசன்டான வில்லன் வேடம் கேட்கும், அரவிந்த்சாமி!த னி ஒருவன் படத்தில், வில்லன் வேடத்தில் நடித்த, நடிகர் அரவிந்த்சாமிக்கு இப்போதும் சில வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவரோ, 'வில்லனாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், என்னுடைய, 'ஹீரோ இமேஜை' பாதிக்காத அளவுக்கு, டீசன்டான வில்லன் வேடங்கள் என்றால் மட்டுமே நடிப்பேன். அதனால், என்னை கொடூரமான வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள்...' என்று, அதுபோன்ற வாய்ப்புகளை திருப்பி அனுப்பி கொண்டிருக்கிறார், அரவிந்த்சாமி. -சி.பொ.,ஜகா வாங்கிய, மமிதா பைஜு!டி யூட் படத்தின், 'ஹிட்' காரணமாக, தன் படக் கூலியை தடாலடியாக உயர்த்தினார், மமிதா பைஜு. ஆனால், அதை அறிந்த, அவரை ஒப்பந்தம் செய்ய படையெடுத்த புதிய தயாரிப்பாளர்கள் தெறித்து ஓட்டம் பிடித்து விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, 'நான் சம்பளத்தை உயர்த்தவே இல்லை. 15 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வெளியான செய்தி, என் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பரப்பிய வதந்தி...' என்று சொல்லி, ஜகா வாங்கி விட்டார்.-- எலீசாரஜினிக்கு, 'ஷாக்' கொடுத்த, பாலகிருஷ்ணா!ர ஜினியின், ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர், சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர், மோகன்லால் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்த நிலையில், தற்போது, ஜெயிலர்- 2 படத்திலும் அவர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகரையும் கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டவர்கள், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை அணுகினர். ஆனால் அவரோ, 'இன்னொரு, 'ஹீரோ' வேடமிருந்தால் சொல்லுங்கள், தாராளமாக நடிக்கிறேன். ஆனால், துக்கடா வேடத்தில் நடித்து என், 'ஹீரோ இமேஜை' கெடுத்துக்கொள்ள மாட்டேன்...' என்று சொல்லி, மறுத்து விட்டார்.-- சினிமா பொன்னையாகருப்புப் பூனைஅம்மன் படத்தில் நடித்து வரும், தாரா நடிகை, ஆரம்பத்தில் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்த போது சம்பள விஷயமாக பெரிதாக, கறார் காட்டவில்லை. தற்போது இப்படத்தை, ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதால், ஒரு மொழியில் மட்டுமே நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து விட்டு, இப்போது பல மொழிகளிலும் வெளியிடுவதால், கணிசமான அளவு தன் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நிற்கிறார். 'நான் கேட்கும் சம்பளத்தை தரவில்லை என்றால், படம் திரைக்கு வரும் போது நீதிமன்றத்தை அணுகுவேன்...' என்றும் மிரட்டல் விடுத்துள்ளார், நடிகை.சினி துளிகள்!* தற்போது தமிழில், மூக்குத்தி அம்மன்- 2 படத்தில் நடித்து வரும், நயன்தாரா, தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியுடனும், ஜோடியாக நடித்து வருகிறார்.* தலைவி மற்றும் சந்திரமுகி- 2 படங்களுக்கு பிறகு, மீண்டும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள, சர்க்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகை, கங்கனா ரணாவத்.* தற்போது, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குனர், அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும், கன்னட நடிகர், யஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.* கன்னி மாடம் மற்றும் சார் போன்ற படங்களை இயக்கிய நடிகர், போஸ் வெங்கட், அடுத்து விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கப் போகிறார்.அவ்ளோதான்!