சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும்!
* குழம்பு அல்லது கூட்டுக்கு தேங்காய்க்கு பதிலாக, கசகச மசாலாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து போட்டு இறக்கலாம் * பொரியலுக்கு பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளலாம் * போளி செய்யும் போது, பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும் போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால், போளி மிருதுவாக இருக்கும் * வற்றல் குழம்பில் ஒன்றிரண்டு மேஜைக்கரண்டி அளவு புளிக்காய்ச்சலை எடுத்து கலந்து விட்டால், சுவையும், மணமும் நிறைந்த வற்றல் குழம்பு தயார் * சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, பெருங்காயத்துாள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஷ் இல்லாத சப்பாத்தி தயார் * கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால், சில சமயம் ஒருவிதமான வாடை வரும். அதற்கு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்த பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி, தண்ணீரை மாற்ற வேண்டும்.