தீபாவளி லேகியம்!
தேவையானவை: சுக்கு - 50 கிராம், சித்தரத்தை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், சீரகம் - 25 கிராம், கண்டதிப்பிலி - 25 கிராம், அரிசி திப்பிலி - 25 கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வெல்லம் - 250 கிராம், இஞ்சி - பெரிய துண்டு, நல்லெண்ணெய் - 50 மில்லி, நெய் - 50 மில்லி. செய்முறை: சுக்கு, சித்தரத்தை, ஓமம், சீரகம், கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விட்டு, அரைத்து வைத்திருக்கும் பொடியை துாவிக் கிளறி, இறுகியதும் அடுப்பை நிறுத்திவிடவும். கொஞ்சம் ஆறியதும் நெய்யும், நல்லெண்ணெயும் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும். தேவைப்படும் போது, இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிடவும்.