உள்ளூர் செய்திகள்

கல்லறை கட்டில்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏழை மக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. சொந்த வீடு என்பது அவர்களுக்கு எட்டாக்கனி. வீடு இல்லாத மக்கள், கல்லறைகளை கூட விட்டுவைப்பது இல்லை. கல்லறைகள் அருகே, கூரை அமைத்து தங்கும் பரிதாபத்தை காண முடிகிறது. இவர்களது குழந்தைகள், கல்லறைகள் மீது தான் ஓடி விளையாடுகின்றனர். இரவில் கல்லறை மீது படுத்து துாங்குகின்றனர். பேய், பிசாசு என, பலர் பயந்து நடுங்கும்போது இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்லறைகள் மீது நிம்மதியாக துாங்குகின்றனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தான் இந்த அவலம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !