கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!
உரக்கச் சொல்லப்படுவதெல்லாம்உண்மையென நம்பி விடாதீர்கள்...ஏமாறும் காதுகளைத் தேடிபெருத்த சத்தத்தோடு தான்பொய்கள் வரும்!புன்னகைக்கும் உதடுகளிலெல்லாம்நேசமிருக்குமென நம்பி விடாதீர்கள்...அழகாக படமெடுத்தாடும்நாகத்தின் கூர்மையான பற்களில்நிச்சயம் விஷமிருக்கும்!வளைந்து பணிவோரெல்லாம்விசுவாசமானவரென நம்பி விடாதீர்கள்...வாய்ப்பு கிடைக்கும்போதுகாலை வாரி விடும்போது தான்சுயரூபம் புரிந்திடும்!தரப்படும் வாக்குறுதியெல்லாம்நிறைவேற்றப்படுமென நம்பி விடாதீர்கள்...தேவைகள் தீர்ந்த பின்வெளிப்படும் துரோகத்தில் தான்சுயநலம் தெரிந்திடும்!போதனைகள் செய்வோரெல்லாம்கடவுளென நம்பி விடாதீர்கள்...பசுத்தோல் போர்த்திய புலிகளும்வஞ்சக எண்ணங்களோடு இங்கேஉறுதியாக உலவிடும்!வெளிச்சத்தில் தென்படுவதெல்லாம்அசல்தானென நம்பி விடாதீர்கள்...கானல் நீரின் முகத்திரைநெருங்கிக் காணும்போது தான்மொத்தமாக கிழிபடும்!ஆதரவு காட்டுவோரெல்லாம்ஆபத்பாந்தவனென நம்பி விடாதீர்கள்...சாத்தான்களும், தேவதைகளாய்வேடமிட்டதை உணரும்போது தான்நிதர்சனம் புலப்படும்! — ஆர்.செந்தில்குமார், மதுரை.