கவிதைச்சோலை - வேண்டுமா?
கனவுகள் வேண்டுமாஉறக்கத்தை நாடுங்கள்காட்சி சுகம் வேண்டுமாவிழிகளை நாடுங்கள்!பாசங்கள் வேண்டுமாசுற்றத்தை நாடுங்கள்காதல் இனிமை வேண்டுமாகவர்ந்தவளை நாடுங்கள்!கையிருப்பு வேண்டுமாசேமிப்பை நாடுங்கள்கவலை விலக வேண்டுமாசிக்கனத்தை நாடுங்கள்!மகிழ்ச்சி வேண்டுமாநல்லெண்ணத்தை நாடுங்கள்மன நிம்மதி வேண்டுமாபக்தியை நாடுங்கள்!வெற்றிகள் வேண்டுமாவிடாமுயற்சியை நாடுங்கள்பாராட்டு வேண்டுமாநல் ஆசானை நாடுங்கள்!ஆரோக்கியம் வேண்டுமாசுறுசுறுப்பை நாடுங்கள்வாழ்வில் உயர வேண்டுமாகடும் உழைப்பை நாடுங்கள்!அர்த்தமுள்ள வாழ்வு வேண்டுமாமனிதநேயத்தை நாடுங்கள்ஆயுள் வரை இனிமை வேண்டுமாதன்னம்பிக்கையை நாடுங்கள்!தனித்திருத்தல் விடுத்துவிருப்பங்கள் நிறைவேறநாடுங்கள், நாடுங்கள்,நாடிக்கொண்டே இருங்கள்!— ஆர்.செந்தில்குமார், மதுரை.