கவிதைச்சோலை: மாற்றத்தை பரிசீலியுங்கள்!
வழமை வழமை என்று புதியதை துாற்றாமல்வருவதை ஏற்கப் பழகுவோரே வாழத் தெரிந்த புத்திசாலிகள்!அந்தக் காலத்தில் என்றுபழமை பேசித் திரியாமல் நிகழ்காலத்தில் பொருந்தி புதுமைகளை ஏற்க வேண்டும்!தீப்பந்த பொழுதிலேயே புழங்கி கிடந்திருந்தால் இருளையே பகலாக்கி அச்சம் விரட்டும் மின்சார விளக்குகளின்பெருவாரியான சீரிய பயன்பாட்டை அனுபவித்திருக்க முடியுமா?கால்நடையாகவே இன்னும்நடக்கும் பயணங்கள் தான் என்றால் வெளியுலகம் தெரிந்துசிந்தனை மென்மேலும் விரிவடைந்து மனித சமுதாயம் நாகரிகத்தோடு வளர்ச்சி பெற்றிருக்கக் கூடுமா?கொத்துக் கொத்தாய் மக்கள் மடிந்தபெருந்தொற்றுகள் ஏதும்இப்போது இல்லை... அப்படியே வந்து வதைத்தாலும்மும்முரமாய் முயன்றுதடுப்பூசி கண்டுதடுத்துவிட்டுத்தானே ஓய்கின்றனர்?கடந்த காலத்தைநினைவில் வையுங்கள்நிகழ்காலத்தை மட்டுமே நிஜ வாழ்வினில் வையுங்கள்!இன்றைய வானும் பூமியுமே நேற்றைய போலில்லை...மாற்றத்தை பரிசீலிப்போர் ஒருபோதும் துயருருவதில்லை!— பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.