உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: விடாமுயற்சியெனும் வெளிச்சமிடு!

கோபத்தில் குணத்தை இழப்பதை விட அர்த்தமற்ற அக்கோபத்தை இழப்பது நல்லது! பொறாமையில் தீமைகள் செய்வதை விட மனதிற்குள் சுயநலமற்ற அன்பை வளர்ப்பது நல்லது! தலைக்கனத்தில் விவாதம் புரிவதை விட தனக்குள் நியாயம் எதுவென்று சிந்திப்பது நல்லது! பிடிவாதத்தில் அவப்பெயர் எடுப்பதை விட இரக்கத்தோடு விட்டுக்கொடுத்து வாழ விரும்புவது நல்லது! ஏமாற்றத்தில் குற்றம் இழைப்பதை விட துணிவோடு மன்னிப்பை வழங்கி மறப்பது நல்லது! இழப்பில் அழுது புலம்புவதை விட சோகம் துடைத்து மீண்டெழுந்து வென்றிட முயல்வது நல்லது! பிரிவில் தனித்துக் கிடப்பதை விட புதிதாய் உறவை தேடி கண்டடைய புறப்படுவது நல்லது! தோல்வியில் இருளில் புதைவதை விட தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியெனும் வெளிச்சமிடுவது நல்லது! - ஆர். செந்தில்குமார், மதுரை. தொடர்புக்கு: 95977 81744.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !