கவிதைச்சோலை: நீங்களே பொறுப்பு!
சுவர் சரியாக இருந்தால் தான் சித்திரமும் ஒழுங்காக இருக்கும்! தோட்டம் சரியாக இருந்தால் தான் வளரும் செடிகளும் சரியாக வளரும்! அஸ்திவாரம் சரியாக இருந்தால் தான் கட்டடங்களும் சரியாக நிற்கும்! வலை கிழிசல் இல்லாமல் இருந்தால் தான் கண்மாயில் நிறைய மீன்கள் கிடைக்கும்! மண் சரியாக இருந்தால் தான் விதைத்தவை வளர்ந்து விளைச்சலும் அங்கே சரியாக இருக்கும்! கற்றுக் கொடுக்கும் குரு ஒழுங்காக இருந்தால் தான் சீடர்களும் ஒழுக்கமாக இருப்பர்! உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் தான் உங்கள் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும்! ஆரம்பம் சரியாக இருந்தால் தான் முடிவும் சரியாக இருக்கும்! உங்கள் பழக்க வழக்கங்கள் ஒழுங்காக இருந்தால் தான் உங்கள் மதிப்பும் சரியாக இருக்கும்! பிறர் மேல் குறை சொல்வதை விடுத்து உங்கள் குறைகளை சரிபடுத்துங்கள்... உங்களை சீர்படுத்துங்கள் உலகம் உங்களை சரியாக பார்க்கும்! - எம்.பாலகிருஷ்ணன், மதுரை.தொடர்புக்கு : 9944565266