மருத்துவ டிப்ஸ்!
பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் வலி, பல் ஆட்டம் போன்ற பாதிப்புகளுக்கு கொய்யா இலை, மாந்தளிர் இவ்விரண்டையும், தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். அந்நீரால் அடிக்கடி வாய்க்கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும் * அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கொண்டைக் கடலையை நிறைய சாப்பிடலாம். இதில், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. இது, நோய்தொற்றை தடுக்கும். இதில், நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும் * பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலந்து விருந்தினரை அசத்தலாம்.