உள்ளூர் செய்திகள்

ரிலாக்ஸ் கார்னர்!

டாக்டரை பார்க்க வரும் நோயாளிக்கு, அவர் கொடுக்கும் மருந்தால் பாதி குணம் என்றால், அவர் பேசும் நம்பிக்கை வார்த்தைகளும் மீதி குணத்தை தரும்.சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பார்க்க வந்த நோயாளியிடம், 'இரண்டு இட்லி, ஒரு டம்ளர் சர்க்கரை இல்லாத பால் சாப்பிட வேண்டும்...' என்றார், டாக்டர்.'சாப்பிடுவதற்கு முன்னாலயா... சாப்பிடுவதற்கு பின்னாலயா டாக்டர்...' என்றான், நோயாளி.'காலையில் வெறும் வயிற்றில் நடக்க வேண்டும்...' என்றார், டாக்டர். 'யார் வயிற்றில் நடக்கணும், டாக்டர்...' என கேட்டான், நோயாளி. - புலவர் மா.ராமலிங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !