ரிலாக்ஸ் கார்னர்!
போஸ்ட் ஆபீசுக்கு வந்தார், ஒருவர். அவருடைய கையில் கட்டுப் போட்டு இருந்ததால், அருகிலிருந்த ஓர் இளம் பெண், 'உதவி செய்யவா, சார்...' எனக் கேட்டாள். 'ஆமாம்மா. என்னால எழுத முடியாது. நான் சொல்ல சொல்ல நீ எழுது...' என்றார். அந்தப் பெண்ணும் கடிதத்தில் அவர் சொன்ன செய்தி மற்றும் முகவரியை எழுதிவிட்டு, 'வேறு எதாவது எழுத வேண்டுமா, சார்?' என, கனிவுடன் கேட்டாள்.'குறிப்புன்னு போட்டு, அதன் கீழே, 'மோசமான கையெழுத்துக்கு மன்னிக்கவும்' என, எழுதிடும்மா...' என்றார், கையில் கட்டு போட்டிருந்தவர்.- புலவர் மா.ராமலிங்கம்