உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பருப்பில் நன்கு கலந்து, பின்னர் தாளித்து சாப்பிட்டால், மிகவும் நன்றாக இருக்கும்.* புளித்த தயிரை வீணாக்காமல், ஒரு டம்ளர் தயிருக்கு, ஒரு டம்ளர் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இவற்றை சேர்த்து, ஐந்து நிமிடம் ஊற வைத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சுட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.* கேழ்வரகு மாவுடன், எள்ளும், சிறிது வெல்லமும் சேர்த்து அடை செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு, இது நல்ல பலனை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !