உள்ளூர் செய்திகள்

திண்ணை!

வானதி பதிப்பகம் வெளியீடான, ஆர்.டி.பார்த்தசாரதி எழுதிய, 'தமிழ்நாடு தந்த தலைவர்கள்!' என்ற நுாலிலிருந்து: இ ந்திய விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ்வாதியுமான சத்தியமூர்த்திக்கு மாலைகள் என்றால் பிரியம். எப்போதும் சந்தோஷமாக வாழ்வதில் ஆசை கொண்டவர். மாலைகள் போட்டுக் கொள்வதையும், சந்தனம் பூசிக்கொள்வதையும், ஊர்வலங்கள் செல்வதையும் மிகவும் ரசித்தார், அவர். 'எனக்கு மாலைகள் போட்டுக் கொள்வதில் மிகவும் விருப்பம். எனக்கு மாலைகளை அணிவிப்பவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் இன்பமே என் இன்பம்...' என்றார், சத்தியமூர்த்தி. சு குண விலாச சபாவின், நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார், சத்தியமூர்த்தி. பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளை எதிர்ப்பதற்கும், தேசிய உணர்வை மக்களிடையே பரப்புவதற்கும், நாடக மேடையை பயன்படுத்தினார். பி ரிட்டிஷ் அரசு, சில நாடக குழுக்களுக்கு தடை விதித்தபோது, சென்னை சட்டசபை உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி, சட்டசபையில் நாடக கலைஞர்களுக்காக குரல் கொடுத்தார். 'க தரின் வெற்றி' என்ற நாடகத்தில் நடித்தார், எம்.ஜி.ஆர்., அப்போது, காங்கிரஸ் அனுதாபியாக இருந்தார், எம்.ஜி.ஆர்., சத்தியமூர்த்தியே தன் காங்கிரஸ் ஆர்வத்திற்கு காரணம் என, பலமுறை கூறியுள்ளார், எம்.ஜி.ஆர்., ********** 'வ ழக்கறிஞர்கள், அவரவர்களின் தொழிலை மட்டும் கவனிப்பதோடு இல்லாமல், மக்களின் உரிமைகளையும், பாதுகாக்க வேண்டும். இதற்கு வழக்கறிஞர்களிடம் எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன...' என, ராஜாஜிக்கு அறிவுரை கூறியிருந்தவர், சேலம் விஜயராகவாச்சாரியார். 'இது தான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது...' என்றார், ராஜாஜி. சேலத்தில், கடந்த, 1906ல், சேலம் நகர சபை தலைவராக பணியாற்றிய போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமத்துவத்திற்கு உதவுவதற்காக, தண்ணீர் குழாய்களை கவனிக்கும்படி உத்தர விட்டார், ராஜாஜி. இதற்கு வலுவான எதிர்ப்பு எழுந்தது. பொருட்படுத்தவில்லை, ராஜாஜி. அவர் செய்த காரியம், சட்டத்திற்கு முரண்படாததால், எதிர்ப்பு அடங்கி விட்டது. **********ஒருசமயம், திரைப்பட கவிஞர் வாலியிடம் உதவியாளராக சேர, மூன்று பேர் விரும்பினர். ஒருவர், திருவல்லிக்கேணியில் பார்மஸி வைத்திருந்தார். இன்னொருவர், டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனோடு பணிபுரிந்தவர். மூன்றாம் நபர், தன் கிராமத்தில் இருந்து விடாமல் வாலிக்கு கடிதம் போட்டவர். ஆனால், மூவரும், வாலியின் உதவியாளர் ஆகவில்லை. ஆயினும், இந்த மூவரும் தங்கள் சுய முயற்சியால், சினிமா துறையில் உயர்ந்து விட்டனர். முதல் நபர், 100 படங்களை இயக்கிய, ராம நாராயணன். இரண்டாம் நபர், ரஜினி, கமல் படங்களை இயக்கிய, ஆர்.சி.சக்தி. மூன்றாம் நபர், தான் இயக்கிய முதல் படத்தையே பெரிய வெற்றிப் படமாக ஆக்கிய, கங்கை அமரன். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !