உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - மகத்தான மக்கள் மலர்!

வாரமலர், தினமலரின் இணைப்பென்று யார் சொன்னது? லட்சோப லட்ச வாசக இதயங்களின் பிணைப்பன்றோ! நாற்பதைக் கடந்த பின்பும் நவீனம் மெருகேறி ஜொலிக்கும் 'மார்க்கண்டேய' வரம் வாங்கிய மகத்தான மக்கள் மலர்!முப்பத்து இரண்டு பக்கத்தில் பதினாறுக்கும் மேலான பகுதிகளை முத்துப்பல் வரிசையில் கோர்த்துமுழுமதி போல் பொழியும் அமுத மலர்!பாமரர் முதல் மெத்தப் படித்தவர் வரை பரவசத்தோடு வாசித்து மகிழும் பல்சுவை தளும்பி தெறிக்கும் பண்பட்ட பக்குவ மலர்!பக்கம் நிரப்பி நழுவிப் போகாமல்வாசகர் உள்ளம் வளரும் வண்ணம் வகைவகையாய் ஆய்ந்து படைத்து வானளவு உயர்ந்த வாடா மலர்!ஞாயிற்றுக்கிழமைக்கு ஞாயிறு வெளிச்சம் தந்து உயிர்ப்புக்கு வழி காட்டும்உன்னதமான ஒளி மலர்!வாசகப் படைப்பாளியை வற்றா நேசத்தில் ஈர்த்து அள்ளி வழங்கி ஆதரிக்கும் அகிலம் போற்றும் அதிசய மலர்!பிறந்தநாள் முதலாய் தனித்துவ பெருமை காத்து தனிக்காட்டு ராஜாவாய் ஓங்கி ஒளிர்ந்து, மணம் வீசி உலகம் சுற்றும் வாலிப மலர்!யதார்த்தம் விலகாத நிஜத்தைஅன்றும், இன்றும், என்றும்எளிமை, இனிமை, இளமை எனும், முக்கூட்டு லயத்தில் இழைத்து நவரசம் படைக்கும் நம்பிக்கை மலர்!அச்சு ஊடகத்தின் அதிசய சுரங்கமாய்அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய்வாரம் வாரம் பூக்கும் குறிஞ்சி மலரே வளமார்ந்த எங்கள் வாரமலரே...வாழ்க வாழ்கவே! — பி.ஜே.பி. இசக்கி, பொட்டல்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !