இதப்படிங்க முதல்ல...
சிவகார்த்திகேயனுக்கு, 'செக்' வைத்த, ஷாருக்கான்!கடந்த பொங்கலுக்கு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, அயலான் படத்தின், கிராபிக்ஸ் பணிகளை, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், 'ரெட் சில்லி' நிறுவனம், செய்திருந்தது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு கடன் வைத்து விட்டு, அப்படத்தை, தெலுங்கில் வெளியிட, சிவகார்த்திகேயன் தரப்பு களம் இறங்கியது.இது தெரிந்து, 'என் நிறுவனத்திற்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுத்து விட்டு, படத்தை வெளியிடுங்கள்...' என்று, படத்தை வெளியிட தடை போட்டு, 'செக்' வைத்து விட்டார், ஷாருக்கான்.— சினிமா பொன்னையாகொந்தளிக்கும், கீர்த்தி சுரேஷ்!பெரும்பாலும், சினிமா நிகழ்ச்சிகளுக்கு, மஞ்சள் நிற புடவை அணிந்து தான் வருவார், நயன்தாரா. சமீபகாலமாக, கீர்த்தி சுரேஷும், திரைப்பட விழாக்களுக்கு மஞ்சள் நிற புடவை அணிந்து வருகிறார்.அதை பார்த்து, 'நயன்தாராவை அப்படியே காப்பி அடித்து விட்டீர்களே...' என்று கேட்டனர், சிலர். செம காண்டாகி, 'எனக்கு பிடித்தமானது, மஞ்சள் நிற புடவை. அதனால் தான், இதை அணிந்து வந்திருக்கிறேன்.'மஞ்சள் நிற புடவை என்ன, நயன்தாராவுக்கு மட்டுமே சொந்தமானதா?' என்று, தன்னை, காப்பி அடிப்பதாக சொன்னவர்களுக்கு, 'நச்' பதிலடி கொடுத்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.— எலீசாகதையின் நாயகியான, ரக்சிதா மகாலட்சுமி!சின்னத்திரையிலிருந்து, பிரியா பவானி சங்கர், வாணி போஜன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர், சினிமாவில் பிரபலமாகி வருகின்றனர்.தற்போது, சரவணன் - மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான,ரக்சிதா மகாலட்சுமியும், எக்ஸ்ட்ரீம் என்ற படத்தின் மூலம், கதையின் நாயகியாக, மிரட்டலான போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.முதல் படத்திலேயே, 'ஆக் ஷன் ரோலில்' நடிப்பதால், சில மாதங்களாக சண்டை பயிற்சி எடுத்து, தற்போது, 'ஆக் ஷன்' கோதாவில் குதித்துள்ளார், ரக்சிதா.எலீசா'டென்ஷன்' பண்ணும், ராஷ்மிகா!பாலிவுட்டில், ராஷ்மிகா மந்தனா நடித்த படங்கள், வெற்றி பெற்று வருவதை அடுத்து, அவருக்கான, 'ரேட்டிங்' எகிறி உள்ளது. இதனால், சமீபகாலமாக, மும்பையிலேயே முகாமிட்டுள்ளார்.தெலுங்கு படங்களுக்கு, 'கால்ஷீட்' கொடுத்தபடி நடித்துக் கொடுக்காமல், 'டேக்கா' கொடுப்பதோடு, பல நாட்களாக, டோலிவுட் மெகா 'ஹீரோ'களையே, 'டீலில்' விடுகிறார். இதனால், கடுப்பான, டோலிவுட் 'ஹீரோ'கள், ராஷ்மிகாவை, முழுமையாக டோலிவுட்டை விட்டே ஏறக்கட்டுமாறு, இயக்குனர்களுக்கு, 'ஆர்டர்' போட்டுள்ளனர். — எலீசாமீண்டும் பாக்சிங் கோதாவில் குதிக்கும், ஆர்யா!பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான, சார்ப்பட்டா பரம்பரை படம், வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், அவர்கள் இணையப் போகின்றனர். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில், இன்னும் அதிரடியான குத்துச்சண்டை காட்சிகள் இடம்பெறுவதால், தற்போது, பயிற்சியாளர் மூலம், மீண்டும் உடற்கட்டை மாற்றுவதோடு, தீவிர குத்துச்சண்டை பயிற்சியிலும் இறங்கி இருக்கிறார், ஆர்யா.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!தாரா நடிகையின் கணவரை, தல நடிகர் கழட்டி விட்டதை அடுத்து, அவரிடமிருந்த இன்னொரு கதையை, உச்ச நடிகரிடம் சொல்ல வைத்திருக்கிறார். தாராவின் சிபாரிசு என்பதால், அடுத்த நாளே கதை கேட்டுள்ளார், உச்ச நடிகர். ஆனால், அவரோ, உப்புச்சப்பில்லாத கதையை சொல்லி, உச்ச நடிகரை கடுப்பேற்றி விட்டார்.இதனால், நடிகையை தொடர்பு கொண்ட நடிகர், 'இனிமேல், கதை இருக்கு, கத்தரிக்காய் இருக்கு என்று சொல்லி, தப்பித் தவறி, உன் ஆத்துக்காரரை, என் வீட்டுப் பக்கம் அனுப்பி விடாதே...' என்று, கொல வெறியில் கொந்தளித்துள்ளார், உச்ச நடிகர். சினி துளிகள்!* ஜெயிலர் - 2 படத்தில், மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார், நயன்தாரா.அவ்ளோதான்!