நம்மிடமே இருக்கு மருந்து - பெண்களுக்கான ஆரோக்கிய உணவுகள்!
தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால், பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.பொதுவாக, 40 வயதை கடந்த பிறகு, மாதவிடாய் முற்றிலும் நின்று விட்ட பின், பெண்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படுவது அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், இதய நோய் வராமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் சருமத்தை பாதுகாக்க, உணவு முக்கியமான பங்கு வகிக்கிறது.ஆய்வுகளின்படி பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும்.தக்காளி: பெண்களின் ஆரோக்கியத்தில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், லைஸ்பின்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளன. பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய், எண்ட்டோமெட்டிரியல் புற்றுநோய் மற்றும் வயிறு புற்றுநோய் போன்றவற்றிலிருந்து காக்கிறது.வால்நட்: ஒமேகா - 3 உள்ள இது, இதயத்திற்கும், மூளைக்கும் மிகவும் நல்லது. இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, பெண்கள், வாரம்,2 - 3 முறை வால்நட் எடுத்துக் கொள்ளலாம்.வாழைப்பழம்: மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரொஜென் ஹார்மோன் குறைவதால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வராமல் காக்கிறது.கீரை: பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகளில், கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு, பிறப்புறுப்பு நோய் தொற்று மற்றும் எடை அதிகரிப்பு போன்றவற்றை தடுக்கிறது. குடலில் கெட்ட பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது.பீட்ரூட்: வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மன நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.லவங்கப்பட்டை: வயதான பெண்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை போக்க உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மாலை வேளைகளில் லவங்கப்பட்டை சேர்த்த தேநீர் செய்து அருந்தி வரலாம்.பயிறு வகைகள்: பயிறு வகைகள் வாரத்திற்கு, 1 முதல் 2 முறை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை அளவை சமப்படுத்தவும், உடல் எடை பராமரிப்பு, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.பூசணிக்காய்: கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, பூசணிக்காய். பார்வை மேம்படுத்த, வயிறு கோளாறுகளை குறைக்க உதவுகிறது. பூசணிக்காய் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது நல்லது.தொகுப்பு : எம். மாலா