உள்ளூர் செய்திகள்

கோடையில் தவிர்க்க வேண்டியவை

* பச்சை மிளகாயை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.* நீர் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், காபி, டீயை தவிர்க்கலாம். * சூடான, காரமான உணவை சாப்பிடும்போது, சிலருக்கு வியர்வை வரும். அது மேலும், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தும். எனவே, இவற்றை தவிர்க்கவும். * அசைவம் மற்றும் அதிக புரத உணவுகளை கிரகிக்க, 'மெட்டபாலிசம் ரேட்' அதிகமாகும்போது உடல் அதிக சூடாகும். இதனால், நீர் வறட்சி அதிகரிக்கும். ஆதலால், அசைவம் மற்றும் அதிக புரத உணவுகளை தவிர்க்கலாம். * சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வகை உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், செரிமானக் கோளாறுகளும், மலச்சிக்கலும் ஏற்படலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !