நடந்தது என்ன?
மார்ச் -10, 1801ல் -பிரிட்டனில் முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.1922 -கிளர்ச்சியை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, காந்திஜிக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் குடல்வால்- அழற்சி ஏற்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.1945- இரண்டாம் உலகப் போரில், அமெரிக்க வான் படையினர், டோக்கியோ நகர் மீது குண்டு வீசி, ஒரு லட்சம் பேரை கொன்றனர்.1948 - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர், வானியல் விஞ்ஞானிகள்.1982- ஜுபிடர் விளைவு -- ஒன்பது கிரகங்களும், சூரியனுக்கு ஒரே பக்கத்தில் இருந்தது. இதனால், உலகம் அழிந்துவிடும் என, பீதி கிளப்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.2023 அமெரிக்காவின் சிலிக்கான் வாலி வங்கி பெரிய சரிவை சந்தித்து, தன் பணியை நிறுத்தியது. * 1969ல், மத்திய தொழில் பாதுகாப்பு படை துவங்கப்பட்டது.