நடந்தது என்ன?
மார்ச் 31, 1727ல், பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், தன், 84வது வயதில் காலமானார். 1736ல், அமெரிக்காவில், நியூயார்க் நகரில், உலகின் முதல் பொது மருத்துவனை துவக்கப்பட்டது. முதல் தபால் நிலையமும் திறக்கப்பட்டது. 1870ல், அமெரிக்காவில், முதல் தடவையாக ஒரு கறுப்பர் வாக்களித்தார். 1889ல், ஈபிள் கோபுரம் துவக்க விழா கொண்டாடப்பட்டது. 1917ல், டென்மார்க்கிடமிருந்து, மேற்கு இந்திய தீவுகளை, அமெரிக்கா, 25 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, அதற்கு, 'விர்ஜின் தீவுகள்' என பெயர் சூட்டியது. 1966ல், சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த, முதல் விண்கலம் என்ற பெருமையை, சோவியத்தின், 'லுாலா-10' விண்கலம் பெற்றது. 1990ல், இந்திய அமைதிப்படை, இலங்கையிலிருந்து முழுமையாக விலக்கிக் கொண்டது 1990ல், மிக உயரிய பாரத ரத்னா விருது, அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.