உள்ளூர் செய்திகள்

வெயிலை சமாளிப்பது எப்படி?

சுளீர் என, வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனி, 'தோல் கறுத்திடுச்சு, முகத்துல சுருக்கம் வந்திருச்சு, எண்ணெய் அதிகமா வடியறதால முகத்துல பரு வந்திருச்சு...' என, வெயில் கால பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.மாசு காரணமாக சூரியனின் புற ஊதா கதிர்கள், நம் மேல் நேரடியாக படுவதால் இதெல்லாம் வரும். இருப்பினும், வெயில் காலத்தில் வரும் பிரச்னைகளை சில டிப்ஸ்களை பயன்படுத்தி சமாளிக்கலாம், வாருங்கள்.சன்ஸ்கிரீன்!கோடை காலத்தில், காலை, 10:00 மணிக்கு மேல் வெயிலில் போவதைத் தவிர்க்கலாம். முடியாத பட்சத்தில், உங்க விரலில் மூன்று ரேகை கோடுகளில், ரெண்டாவது கோடு வரைக்கும், 'சன் ஸ்கிரீம்' எடுத்து, முகம், கழுத்துப் பகுதிகள் வரை பூசி, 15 நிமிடம் அப்படியே விடுங்கள். பிறகு, 'டிஷ்யூ' பேப்பரால் நன்றாக துடையுங்கள். இதற்கு மேல், 'மேக்-அப்' போட்டுக் கொண்டு வெளியில் செல்லலாம். வெயிலால் உங்கள் சருமத்தை ஒன்றும் செய்ய முடியாது. பெர்பியூம்! சிட்ரஸ் அடிப்படையிலான, 'பெர்பியூம்' பயன்படுத்துவர், சிலர். இந்த வகை, 'பெர்பியூம்' வெயிலுடன் வினைபுரிந்து, சருமத்தில் பிரச்னையை ஏற்படுத்தி விடும். என்ன சாப்பிடலாம்? சர்க்கரையை குறையுங்கள். 'ஜங்புட்' நிராகரிப்பது நல்லது. வானவில் உணவு என்பர். அதாவது, எல்லா நிற காய்கறிகள், பழங்களை நிறைய சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு, 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைந்தால் தான், சருமம் உலர்ந்து, சீக்கிரமே சுருக்கம் வந்துவிடும். கொழுப்பைத் தவிர்க்காதீங்க! தேவையான அளவுக்கு நம் உடலில் கொழுப்புச்சத்து இருந்தால் தான், தோலுக்கு நல்லது. எனவே, நல்ல கொழுப்பு இருக்கும் உலர் பழங்கள் மற்றும் மீன் சாப்பிடுவது அவசியம். வைட்டமின் டி!சிலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். அவர்கள் முகத்தில், 'சன் ஸ்கிரீன்' போடுவதால், வைட்டமின் டி கிடைக்காதே என, நினைக்கலாம். கவலைப்படாதீங்க, உடம்பில் எங்கு சூரிய ஒளி பட்டாலும் வைட்டமின் டி உங்களுக்கு கிடைத்துவிடும். தவிர, மிருதுவான பருத்தி உடை அல்லது 'பிளாக் ஷேட்ஸ்' உள்ள ஆடை போடுவதாலும் சூரிய ஒளியை உங்கள் சருமம் உள்வாங்கும். சன் கிளாஸ்! கோடை விடுமுறைக்கு, வெளியூர் சுற்றுலா செல்லும்போது, தரமான, சன் கிளாஸ் ரொம்பவே முக்கியம். வெயில் நேரத்தில் நீச்சலடிக்கப் போறீங்கன்னா, 'வாட்டர் புரூப் சன் ஸ்கிரீன்' மிகவும் அவசியம்.     சம்மருக்கு 4 வகை பேக்! சோற்றுக்கற்றாழையில், சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டு, முகத்தில் போட்டு, 15 நிமிடம் கழித்து கழுவலாம். கொஞ்சம் தயிர், கொஞ்சம் கடலை மாவு கலந்து முகத்துக்கு போட்டு, 15 நிமிடம் கழித்து கழுவலாம்.ஒரு சிட்டிகை மஞ்சள் துாள், கொஞ்சம் தயிர், சில சொட்டு தேன் கலந்தும் முகத்தில் போடலாம். சிவப்பு சந்தனத்துடன், பன்னீர் கலந்தும் முகத்துக்கு போடலாம். இந்த நான்கும் சருமத்தின், சன் டேனையும், கருவளையத்தையும் போக்கும். இறந்த செல்களை நீக்கும். சருமத்தை காக்கும் புரதமான கொலாஜினை கொடுக்கும். வயதான தோற்றத்தை தடுக்கும். அதனால், இந்த பேக்குகளை உங்க முகத்துக்கு போட மறந்துடாதீங்க.     - எஸ்., மலர்விழி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !