உள்ளூர் செய்திகள்

பேருந்து ஓட்டுனரான, மீனாட்சி!

ஜெர்மனி நாட்டில், பூர்த் என்ற நகரில், பேருந்து ஓட்டுனர் ஆக இருக்கிறார், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண், மீனாட்சி. இவர் ஓட்டுனர் மட்டும் அல்ல. இசைக்கல்லுாரியில் பயின்று, உயர் ரேங்க் பெற்றவர்.மேடை பாடகராக இருந்த தந்தை, திடீரென்று இறந்து விட்டதால், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம், மீனாட்சிக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில், மேடைகளில் பாடல்களை பாடி வந்தார். அப்போது தான், 'கொரோனா' தொற்று வந்து அனைவரையும் புரட்டிப் போட்டது.அடுத்ததாக, டிரைவிங் கற்று, திருவனந்தபுரத்தில் பேருந்து ஓட்டினார். ஜெர்மனியில், பேருந்து ஓட்டுனர் வேலை இருப்பதாய் அறிந்து, விண்ணப்பித்தார். அவர் திறமைக்கு உடனே வேலை கிடைக்க, இப்போது தாய், சகோதரர்களுடன் ஜெர்மனியில் வாழ்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !