உள்ளூர் செய்திகள்

ஆஸ்திரேலியாவில், ஒரு திருவிதாங்கூர்!

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள கிராமம் ஒன்றுக்கு, திருவிதாங்கூர் என, பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மெல்போர்ன், விக்டோரியா அருகில் இருக்கும் இந்த கிராமத்துக்கு இந்த பெயர் வர காரணம், இங்கு, 'ட்ராவங்கூர் மேன்சன்' என்ற தோட்டம் இருந்தது. தோட்ட உரிமையாளரான, ஹென்றி மாடன், கேரள மாநிலத்தில் உள்ள அரச குடும்பத்துக்கு, குதிரைகளை விற்று வந்துள்ளார். வியாபார ரீதியாக, திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்ததை நினைவுபடுத்தவே, இந்த பெயரை பயன்படுத்தி வந்தார். அப்படியே அந்த கிராமத்துக்கும், இந்த பெயர் நிலைத்துவிட்டது.மூவாயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்து சாலைகளுக்கு, பரோடா தெரு, லக்னோ தெரு, பெங்கால் தெரு, காஷ்மீர் தெரு மற்றும் மங்களூர் தெரு என்றும், பெயர் வைத்துள்ளனர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !