உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - உழைப்பாளர் தினம்!

நாளெல்லாம் விழித்துஅயராது உழைத்துநாடு செழிக்கதன்னை ஈந்திடும்வியர்வை மனங்களின்திருவிழா!சோம்பலின் இலக்கணம்அறியா பாட்டாளிகளுக்குஆராதனை கீதங்கள்பாட வேண்டியதினம் இது!உழைக்கும் வர்க்கத்தின்உள்ளங்களில்உவகை பொங்கபாராட்டு தெரிவிக்க வேண்டியபரவச நாள் இது!உழைப்போரின் வாழ்வியலைபடித்து முன்னேறதீர்மானிக்க வேண்டியஅர்ப்பண நாள் இது!சுறுசுறுப்பில் எறும்பாய்வாழ்வின் கரும்பாய்நாட்டிற்கு பயனாய்வாழ்ந்தவர்களைநினைவு கூர வேண்டியபொன்னாள் இது!விலாசம் இல்லாதவேர்களாய்வாழ்ந்த பலரின்சரித்திரங்களைஅறிந்திட செய்யவேண்டிய நாள் இது!உழைத்து ஓய்ந்தஉள்ளங்களைஇளைப்பாறசெய்ய வேண்டும்இம்முடிவுக்குள்வரவேண்டிய நாள் இது!உழைத்தோரை பின் தொடர்ந்துஉழைப்போம் உயர்வோம்நாட்டின் துயரங்களைதுடைப்போம்துன்பங்களைக் களைவோம்!— சங்கீதா சுரேஷ், தருமபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !