அந்துமணி பதில்கள்!
ஆர். ஜெயலட்சுமி, நெல்லை: அந்துமணி பிறந்த நாள் கொண்டாடுவது நட்சத்திரபடியா, ஆங்கில தேதி படியா?ஆங்கில தேதிப்படி, ஜூலை 1ம் தேதி பிறந்த நாளை கொண்டாடுவேன்; அதுவும் அலுவலகத்தில். அன்று, உடன் வேலை செய்வோர் எல்லாம் மாலை அணிவிப்பர் அல்லது, 'பொக்கே' கொடுப்பர். அப்போது, நமது தலைமை புகைப்படக் கலைஞர் முருகராஜ், 'போட்டோ' எடுப்பார். அவை, பா.கே.ப., பகுதியில் தொடர்ந்து வெளியாகும்!* சு. சுவாமிநாதன், ஈரோடு: ஒரு மனிதனை எடை போடுவது எப்படி?அவர், என்ன பணி செய்கிறார் என்பதைக் கொண்டு எடை போடப்படுவதில்லை; அந்தப் பணியை எப்படிச் செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை எடை போட வேண்டும்!ப. ராகவன், மதுரை: வாழ்வில் எளிதானது எது?எப்போதும் எண்ணியதை நிறைவேற்ற முயற்சித்தால், அதை அடைவது எளிது!ஜி. விஜயகுமார், கோவை: நீங்கள், நீச்சல் பழகியது ஆற்றிலா, குளத்திலா, கடலிலா இல்லை வாய்க்காலிலா... எங்கே பழகினீர்கள்?எனக்கு, 12 வயது இருக்கும்போது, தாமிரபரணி ஆற்றில் நீச்சல் கற்றேன். சொல்லிக் கொடுத்தவர், யூசுப்கான் என்ற, 'தினமலர்' நெல்லை பதிப்பு அச்சகத்தின், 'போர்மென்.' அதன்பின், வங்க கடலில் நானாகவே நீச்சலடிக்க கற்றுக்கொண்டேன். ஆ. மிச்சேல், வடமதுரை: 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கு, திருமாவளவன் பெயர் பரிசீலிக்கப்படுமா?இதுபோன்ற தமாஷ் கேள்விகளெல்லாம் கேட்க, யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?க. வேதவல்லி, திருக்கடையூர்: அந்துமணியாரே... பெண்கள், உம்மை, 'சைட்' அடிப்பதை கவனித்ததுண்டா?என் முகத்தைத் தான் வாரமலர் இதழில் பார்க்கிறீர்களே... அதைப் பார்த்தால், 'சைட்' அடிப்பார்களா?* ஆர். கார்த்திக்,கோவை: வாழ்வில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்கிறானே, என் நண்பன்...நல்ல புத்திசாலி நண்பன். அவரை விட்டு விடாதீர்கள். சிக்கனமாக இல்லாதவர், சாமர்த்தியசாலியாக இருக்க முடியாது; சாதுரியமாக குடும்பமும் நடத்த முடியாது!