இதப்படிங்க முதல்ல...
ரஜினியை, 'டென்ஷன்' ஆக்கிய படக்குழு!தற்போது, வேட்டையன் படத்தில் நடித்து வரும், ரஜினி, இதையடுத்து, விரைவில் தன், 171வது படமான, கூலி படத்தில் நடிப்பதற்கும், தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், வேட்டையன் படத்தின் பல காட்சிகள், திட்டமிட்டபடி வராததால், மீண்டும் மீண்டும், 'ரீ ஷூட்' பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.இதனால், அப்பட குழுவிடம், 'எனக்காக இன்னொரு இயக்குனர் காத்துக் கொண்டிருக்கிறார். அதனால், என் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரம் படமாக்கி, என்னை விட்டு விடுங்கள்...' என்று, கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார், ரஜினி.— சினிமா பொன்னையாகவர்ச்சிக்கு தயாரான, ஐஸ்வர்யா ராஜேஷ்!குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். தன் மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியாக, தற்போது, தானும் கவர்ச்சி அவதாரம் எடுக்கப் போவதாக, பரபரப்பு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.சமீபத்தில், சமந்தா, ராஷி கண்ணா ஆகியோர், உள்ளாடை அணியாமல், கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டனர். அதுபோன்று, ஐஸ்வர்யா ராஜேஷும் உள்ளாடையின்றி, மேல் சட்டை பட்டனை கழட்டி விட்டு, அதகளப்படுத்தும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.— எலீசாசிரிப்பையே பதிலாக கொடுத்த, விஜய்!தற்போது, விஜயின் சினிமா மார்க்கெட், 'டாப் கியரில்' உள்ளது. இந்த நேரம் பார்த்து, அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டு, அரசியலில், 'என்ட்ரி' கொடுக்கிறார். அதோடு, அவர் ஏற்கனவே நடித்து வெளியான, கில்லி உள்ளிட்ட சில படங்கள், மீண்டும், 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டு, 'சூப்பர் ஹிட்' அடித்துள்ளது.ரசிகர்கள் மத்தியில், அவருக்கு இருக்கிற இந்த மவுசை பார்த்து, திரையுலகின் சில சீனியர்கள், விஜயை சந்தித்து, 'அரசியலுக்கு சென்றாலும், ரசிகர்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு ஒரு படத்திலாவது நீங்கள் நடிக்க வேண்டும்...' என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், விஜயோ, அதுகுறித்து, எந்த பதிலும் சொல்லாமல், சிரிப்பை மட்டுமே, அவர்களுக்கு, பதிலாக கொடுத்துள்ளார்.— சி.பொ.,அஜித் படத்தில், தெலுங்கு நடிகை!தெலுங்கு சினிமாவில், மகேஷ்பாபு, பவன் கல்யாண் மற்றும் ரவிதேஜா போன்ற மெகா நடிகர்களுடன் நடித்து, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும், நடிகை ஸ்ரீலீலா.விஜயின், கோட் படத்தில், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, தமிழில் அறிமுகமாக உள்ளார். அடுத்து, தமிழில் மேல்தட்டு நடிகர்களின் படங்களை கைப்பற்ற கல்லெறிந்து வந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்க இருக்கும், குட் பேட் அக்லி என்ற படத்தை, கைப்பற்றி உள்ளார். இதையடுத்தும், சில படங்களுக்கு குறி வைத்து வருகிறார்.இப்படி வந்த வேகத்திலேயே, விஜய் அடுத்து, அஜித் படத்தை கைப்பற்றி விட்டதால், ஸ்ரீலீலாவின் இந்த, 'என்ட்ரி' மற்ற கோலிவுட் அம்மணிகளை அலற விட்டுள்ளது.— எலீசாதமன்னாவுக்கு, 'செக்' வைத்த, சைபர் க்ரைம்!பெரும்பாலான நடிகையர், 'சோஷியல் மீடியா'வில், பல பொருட்கள் குறித்த விளம்பரங்கள் செய்து, லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அதேபோல், நடிகை தமன்னாவும் சட்டவிரோதமாக செயல்படும், 'போர்பிளே' உள்ளிட்ட சில செயலி மூலம், ஐ.பி.எல்., போட்டிகள் குறித்து விளம்பரங்களை செய்து, இதற்காக பெரும் தொகையும் வாங்கி வந்தார்.ஆனால், இந்த சட்டவிரோத விவகாரம், 'சைபர் கிரைம்' போலீசுக்கு தெரிந்ததை அடுத்து, தமன்னாவுக்கு சம்மன் அனுப்பி, அதிர்ச்சி கொடுத்து விட்டனர். இதையடுத்து, 'சோஷியல் மீடியா'வில், மேலும், தான் செயல்பட்டு வந்த, சில, 'சீக்ரெட்'டான சட்டவிரோத, 'ஆப்'களில் இருந்தும், சத்தமில்லாமல் வெளியேறி விட்டார், தமன்னா.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!தன் முந்தைய படத்தில், ஈ.வெ.ரா.,வை கலாய்த்த, வாசனை காமெடியனுக்கு, அந்த படம், 'சூப்பர் ஹிட்'டாக அமைந்ததால், அடுத்து நடித்துள்ள, புதிய படத்திலும், திரையுலகைச் சார்ந்த பல முன்னணி, 'ஹீரோ, ஹீரோயின்'களை, கடுமையாக கலாய்த்து தள்ளியிருக்கிறார்.இதில், வம்பு நடிகர், தாரா நடிகை ஆகியோரின், சொந்த வாழ்க்கை குறித்த சில விஷயங்களை சொல்லி, அவர் கலாய்த்திருப்பதால், சம்பந்தப்பட்டோர், இவர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர். இது போன்று யாரையாவது வம்புக்கு இழுத்து கலாய்த்தால் தான், படங்களை வெற்றி பெற வைக்க முடியும் என்பதால், இனிமேல், படத்துக்கு படம், பிரபலங்களை கலாய்த்து தள்ளுவது என்று முடிவெடுத்துள்ளார், வாசனை காமெடியன்.சினி துளிகள்!* வடக்குப்பட்டி ராமசாமி படத்தை அடுத்து, இங்க நான் தான் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார், சந்தானம்.அவ்ளோதான்!