இதப்படிங்க முதல்ல...
கரை வேஷ்டிக்கு மாறும், விஜய்!கோட் படத்தையடுத்து, தன், 69வது படத்தில் நடிக்கப் போகிறார், விஜய். அவரது கடைசி படமான இது, முழுக்க முழுக்க அரசியல் கதையில் உருவாகிறது.'முதல் முறையாக, இந்த படத்தில், கரை வேஷ்டி - துண்டு அணிந்து, முழு அரசியல்வாதியாக மாறி நடிக்கப் போகிறேன். அதோடு, இந்த படத்தில், என் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்த பல விஷயங்களை, மக்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன்...' என்கிறார், விஜய்.— சினிமா பொன்னையா'ஓவர்டேக்' செய்த, ராஷ்மிகா!த்ரிஷா,- நயன்தாரா ஆகிய இருவரும், கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும், இப்போது தான், 10 கோடி ரூபாயை எட்டிப் பிடித்துள்ளனர்.ஆனால், 2016ல், கன்னட சினிமாவில் அறிமுகமானார், ராஷ்மிகா மந்தனா. தற்போது, ஹிந்தியில், சல்மான்கானுடன் சிக்கந்தர் படத்தில் நடிக்க, 13 கோடி ரூபாய், சம்பளம் பேசி இருக்கிறார். அந்த வகையில், சினிமாவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளிலேயே, த்ரிஷா மற்றும் நயன்தாரா போன்ற சீனியர் நடிகையரை, 'ஓவர்டேக்' செய்திருக்கிறார், ராஷ்மிகா மந்தனா.— எலீசாதலை சுற்ற வைக்கும், பிரியங்கா மோகன்!ஆரம்ப காலத்தில், தனக்கு, தயாரிப்பாளர்கள், கேரவன் வசதிகள் செய்து தராதபோதும், கார் மறைவில் நின்று, உடை மாற்றி நடித்து வந்துள்ளார், பிரியங்கா மோகன். அப்படி இருந்தவர், தனுஷுடன் நடித்த, கேப்டன் மில்லர் படத்துக்கு பின், தன்னை தயாரிப்பாளர்கள் படங்களுக்கு, 'புக்' பண்ணும்போதே, படப்பிடிப்பு நடக்கும், 'லொகேஷனை' கேட்கிறார்.அங்கு தங்க, எந்த ஸ்டார் ஹோட்டலில் அறை, 'புக்' பண்ண வேண்டும்; தனக்கு எப்படிப்பட்ட நவீன வசதி கொண்ட கேரவன் அனுப்ப வேண்டும்; படங்களில் நடிப்பதற்கு எந்த கடைகளில் தனக்கான, 'காஸ்ட்யூம்'களை எடுக்க வேண்டும் என, ஒரு பட்டியலே கொடுக்கிறார்.அதை பார்த்து, 'இவருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட, இது, பெரிய செலவாக இருக்கும் போலிருக்கே...' என, தலை சுற்றி போயுள்ளனர், பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள்.— எலீசாஅனிருத்தின், புதிய அவதாரம்!தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வரும், அனிருத்தை, தான் நடத்தி வரும், 'டிவைன் புட்ஸ்' என்ற நிறுவனத்தில், பங்குதாரர் ஆக்கினார், நயன்தாரா.இதையடுத்து, 'சைடு பிசினஸில்' அனிருத்துக்கு மேலும் ஆர்வம் ஏற்பட, தற்போது, பில்டர் காபி நிறுவனத்திலும் பங்குதாரராகி இருக்கிறார்.'எதிர்காலத்தில், இன்னும் பெரிய அளவில் புதிய தொழில்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், அனிருத்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!வாசனை காமெடியன் பல ஆண்டுகளாக, 'ஹீரோ'வாக நடித்த போதும், இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால், புரோட்டா காமெடியனோ, இரண்டே படங்களில், 'ஹீரோ' மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணி விட்டார்.இதனால், கடும் அதிர்ச்சியில் இருக்கும், வாசனை காமெடியன், இனிமேல், காமெடி கலந்த கதைகளில் நடிப்பதை தவிர்த்து, கருத்து சொல்லும் படங்களில் நடிக்க விரும்புகிறார். ஆனால், அவரது இந்த முடிவை பார்த்து, 'காமெடி, 'ஹீரோ'வான நீங்கள், கருத்து சொன்னால், அதை ரசிகர்கள் ஏற்பரா?' என, கேள்வி எழுப்பினர், சில இயக்குனர்கள்.'புரோட்டா காமெடியன் சொல்லும் போது ஏற்கும், ரசிகர்கள், நான் சொல்லும் போது, ஏற்க மாட்டார்களா? நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர். எனக்கும், சமூகத்தை சீர்திருத்தக் கூடிய கதைகளை தயார் செய்யுங்கள்...' என, நட்பு வட்டார இயக்குனர்களை வலியுறுத்தி வருகிறார், வாசனை காமெடியன்.சினி துளிகள்!* 'ஆக் ஷன்' கலந்த மாறுபட்ட கதைகளை தேடி வருகிறார், சந்தானம்.* ஜவான் படத்தை அடுத்து, பாலிவுட்டிலிருந்து, நயன்தாராவுக்கு ஒரு பட வாய்ப்பு வந்தபோதும், 'கவர்ச்சி துாக்கலாக இருக்கிறது...' என்று சொல்லி, அதில் நடிக்க மறுத்து விட்டார்.அவ்ளோதான்!