சிக்கன் 65 பிரசாதம் வேண்டுமா?
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மாங்காவு தேவி கோவிலில், அசைவ பிரசாதம் கொடுத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் பிராமண பூசாரி ஒருவர்.பொதுவாகவே, பூசாரிகளான நம்பூதிரிகள், சைவமாக இருப்பர். ஆனால், மாங்காவு தேவி கோவில் பூசாரியான கேசவன் மூசா, தன் வீட்டிலேயே கோழிகளை அறுத்து, சமைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து இவரிடம் கேட்ட போது, 'இது காஷ்மீரி கலாசாரத்தை பின்பற்றும் கோவில்; எனவே தான் மாமிசத்தை பிரசாதமாக வழங்கி வருகிறேன்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.