உள்ளூர் செய்திகள்

போர் பிரியரான அமெரிக்கா!

உலகில் எங்கு யுத்தம் நடைபெற்றாலும், அதற்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு யுத்த பிரியர்களாக இருக்கின்றனர் அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க பத்து ஆண்டுகள் யுத்தம் செய்த போது, கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டது. இதனால், ஒரு அமெரிக்க குடும்பம் சராசரி, 45 லட்சம் ரூபாய் கடனாளி ஆகி உள்ளது. இதனால், 2001 முதல் 2012 வரை, அமெரிக்காவின் கடன், 20 சதவீதம் அதிகரித்துள்ளது.பெரும் பொருளாதார இழப்புடன், பயிற்சி பெற்றுள்ள பல்லாயிரம் ராணுவ வீரர்களையும் இழந்துள்ளது அமெரிக்கா. இப்படி இருந்தும் அடுத்தபடியாக எங்கு யுத்த அரங்கேற்றம் நடத்துவது என்று அமெரிக்கா யோசனை செய்து வருவது வருந்தத்தக்கது.-ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !