உள்ளூர் செய்திகள்

நம்மிடம் இருக்கு மருத்துவம்!

செலவே இல்லாமல், பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்.* முளை கட்டிய பயிரில், ஊட்டச் சத்து அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, பி 12, இரும்புச் சத்து, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது* அதிக புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்* நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், செரிமானம் எளிதாக இருக்கும்* புற்றுநோய் செல்களை அழித்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது* தானிய ஒவ்வாமையை குறைக்கிறது* செரிமானத்தைத் துாண்டக் கூடிய சத்து கிடைக்கிறது* உடல் எடையை குறைக்க உதவுகிறது* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்ச்சியை மேம்படுத்துகிறது.முளை கட்டிய பயிரை சாப்பிடும் முறை: * பச்சையாக சாப்பிடுவது நல்லது* வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது* முளை கட்டிய பச்சை பயறை, நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேய்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிபனாக சாப்பிடலாம்* சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்* வயிற்றுப் புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப் படுதல் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !