உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - பப்பாளி!

மருத்துவ குணங்கள் நிறைந்த, பலரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, பப்பாளி. * பப்பாளிப் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இதில் உள்ள வைட்டமின், 'ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது* பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர, பித்த சம்பந்தமான நோய்கள் விலகும்* இப்பழத்தை தவறாமல் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், மாலச்சிக்கல் அறவே நீங்கி விடும்* பப்பாளிப் பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வர, தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்* குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால், அவர்கள் அழகும், ஆரோக்கியமும், புத்திக் கூர்மையும் கொண்டவர்களாக வளர்வர்* பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து தடவ, வேர்க்குருவுக்கு விடை கொடுத்து விடலாம்* பழுத்த பப்பாளிப் பழத்துண்டு ஒன்றை எடுத்து முகம், கழுத்து, பாதப் பகுதிகளில் தேய்த்து, பயத்த மாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவி வர, வறண்ட தோலும் மினுமினுக்கும்* சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள், பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் அடையலாம்* அல்சர் தொல்லை உள்ளவர்கள், பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்* இரண்டு, மூன்று பப்பாளிப் பழத் துண்டுகளை தினசரி சாப்பிட்டு வர, நினைவாற்றல் மேம்படும்* மாலைக்கண் நோயின் அறிகுறி தென்படும்போதே, பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அக்குறையைத் தடுக்கலாம்* நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப் பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் ஈறுகளில் வரும் நோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்* பப்பாளியில் உள்ள, 'பேராக்ஸ் நேஸ்' என்ற தாதுப்பொருள், உடலின் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்* பப்பாளிப் பழத்தைக் கூழாக்கி, வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் சொர சொரப்புத் தன்மை மாறி, முகம் பளபளப்பாக மாறி விடும். சி.ஆர்.ஹரிஹரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !