உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு எங்கே? எப்படி?

இங்கிலாந்து நாட்டில், ஜனவரி முதல் நாள், கையில் ரொட்டி துண்டு மற்றும் நிலக்கரியை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதன் மூலம், இருவருடைய வீடுகளிலும், ஆண்டு முழுவதும், உணவுக்கு பஞ்சம் இருக்காது என்று நம்புகின்றனர்.லாவோஸ் நாட்டில், கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்கி, வானில் பறக்க விட்டும், உயிருடன் விற்கப்படும் மீன்களை வாங்கி, ஆறுகளில் விட்டும் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.ஆஸ்திரியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில், முக்கிய பங்கு வகிப்பது, டின்னர். இளம் பன்றியை, ரோஸ்ட் செய்து, அதன் மேல் மாவு, பனை வெல்லம், குக்கீஸ் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை அலங்கரித்து, சாப்பிடுகின்றனர்.ஜப்பான் நாட்டில், புத்தாண்டு அன்று, வீடு களின் முன், வைக்கோலால் செய்த கயிறுகளை தொங்க விடுகின்றனர். இப்படி செய்தால், கெட்டது விலகி, நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.சுவிஸ் நாட்டில், புத்தாண்டு அன்று, தரையில், ஒரு துளி பாலாடையை, தவற விட்டால், அதிர்ஷ்டம் என்று நம்பப்படுகிறது.ஜெர்மனியில், சிறு பனிக்கட்டியை கீழே போட்டு உருக விடுவர். அது உருகி, இதய வடிவிலோ அல்லது மோதிர வடிவிலோ வந்தால், அந்த ஆண்டு, திருமணம் நடக்கும்; கப்பல் வடிவில் வந்தால், பயணம்; பன்றியின் வடிவில் வந்தால், அந்த ஆண்டில், உணவு பொருட்களுக்கு பஞ்சம் வராது.பழங்கால அமெரிக்கர்கள், மார்ச், 21ம் தேதியை தான், புத்தாண்டாக கொண்டாடினர். அந்நாளை, வசந்த காலத்தை வரவேற்கும் நாளாகவும், அவர்களுடைய வசந்த கால கடவுளான, வாஹாஹன் என்பவரின் பிறந்த நாளாகவும் கொண்டாடினர்.ஆஸ்திரேலியாவில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, டிச., 31ம் தேதி இரவு, 12:00 மணி முதல், விசில் அடித்து, சத்தம் எழுப்புவர். கூடவே, கிலுகிலுப்பை சத்தமும்! அந்நேரத்தில், குதிரை மீது சவாரி செய்வதும், அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.ஹங்கேரியில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கொடும்பாவியை எரிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம், சென்ற ஆண்டில், ஊருக்குள் வந்த கெட்ட சக்தியை அழிப்பதாக நம்புகின்றனர்.பிரான்ஸ் நாட்டில், 1582 வரை, மார்ச், 25ம் தேதியை தான், புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளனர்.வட ஆப்ரிக்காவில் புத்தாண்டு அன்று, தீ மூட்டி, நெருப்பை வணங்கிய பின், அதை தாண்டி செல்வர். இவ்வாறு செய்வதன் மூலம், தங்களது தவறுகள் மற்றும் பாவங்கள், தீக்கிரையாகி விடுவதாக, நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !