பனிக்கால டிப்ஸ்...
காலை - இரவு உணவுகள், ஆவியில் வேக வைத்து, எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பது நல்லது. அதுபோல, டிபன் வகைகளுக்கு, தேங்காய் சட்டினியை தவிர்த்து, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னியும், எல்லா காய்கறிகளையும் போட்டு சமைத்த பாசிப் பருப்பு சாம்பார் போன்ற, எளிதில் செரிக்கக் கூடியவைகளையே செய்து, சாப்பிட வேண்டும்* இரவில், கால்களை நன்றாக கழுவி, 'மாய்ச்சரைசர் கிரீம்' பூசி, 'சாக்ஸ்' அணிந்து, துாங்க செல்ல வேண்டும். இதனால், பாதத்தில் வெடிப்புகள் ஏற்படாது* சருமத்தில் வறட்சியை போக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடலாம். இந்த சமயத்தில், நீங்கள் அணியும் உள்ளாடைகள் பருத்தியால் ஆனதாக இருக்கட்டும். பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்க்கவும்* இரவில் படுக்க போகும்போது, காதுகளில் பஞ்சு வைத்துக் கொண்டாலோ, காதுகளை மூடும் வகையில் துணியால் கட்டிக் கொண்டாலோ, குளிரின் தாக்கத்தை குறைக்கலாம் * வீட்டில் குப்பை சேராமலும், மழை நீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்* குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால், குளிர் தாக்கும் என்பதால், வீட்டில் நடக்கும்போது, 'சாக்சை' போட்டு விடலாம்.- சி.ஆர்.ஹரிகரன்