எழுத்தாளர் ஷோபா டே வாழ்க்கை திரைப்படமாகிறது!
மனம் திறந்து உள்ளதை உள்ளபடியும், கிளுகிளுப்பாகவும் எழுதுபவர், பிரபல பத்திரிகையாளர் மற்றும் நாவலாசிரியரான ஷோபா டே. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது படமாகிறது. இந்தி நடிகை ரவீணா டாண்டன்,ஷோபா டேயின் பாத்திரத்தில் நடிக்கிறார். 'எழுத்தாளராக இருக்கும் பெண் என்ற அளவில், ஷோபா டே, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மற்றபடி அந்த பாத்திரம், கற்பனையில் உருவானதே...' என்கிறார் படத்தின் இயக்குனர் சுதிப்தோ சட்டோபாத்யாயா. படத்தின் பெயர், 'ஷோபா 7 நைட்ஸ்!'— ஜோல்னா பையன்.