பட்டப்படிப்பு முடித்தவருக்கு அப்ரென்டிஸ் வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த யூகோ வங்கியில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.'அப்ரென்டிஸ்' பிரிவில் 544 இடங்கள் உள்ளன. இதில் மேற்குவங்கம் 85, உ.பி., 47, ஒடிசா 44, ராஜஸ்தான் 39, மஹாராஷ்டிரா 31, பீஹார் 39, ம.பி., 28, ஹிமாச்சல் 27, அசாம் 24, தமிழகம் 20 உட்பட மொத்தம் 544 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 16.7.2024விவரங்களுக்கு: ucobank.com